கீர்த்தனாவுக்கு ரூ. 1 கோடி; காசிமாவுக்கு ரூ. 50 லட்சம்;
மித்ராவுக்கு ரூ 40 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, டிச.
மாலத்தீவில் 2ந் தேதி முதல் 6ந் தேதி வரை நடைபெற்ற 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா ஆகியோர் பதக்கங்கள் வென்றனர். கீர்த்தனாவுக்கு 1 கோடி ரூபாயும், காசிமாவுக்கு 50 லட்சம் ரூபாயும், மித்ராவுக்கு 40 லட்சம் ரூபாய் என மொத்தம் 1 கோடியே 90 இலட்சம் ரூபாய் வழங்குவதாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கீர்த்தனா மற்றும் காசிமா ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை முதலமைச்சர் இன்று வழங்கி, வாழ்த்தினார். அடுத்தடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், சென்னையில் நடைபெற்ற SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025 போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, டெல்லியில் நடைபெற்ற 3-வது சிஐஐ விளையாட்டு வணிக விருதுகள் விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு வழங்கப்பட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்திற்கான விருதினையும் காண்பித்து, வாழ்த்து பெற்றனர்.
இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியின் சார்பில் 9ந் தேதி முதல் நேற்று வரை சென்னையில் நடைபெற்ற SDAT ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2025 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் - ஜோஷ்னா சின்னப்பா, அபே சிங், அனஹத் சிங், வேலவன் செந்தில்குமார், ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் இயக்குநர் சைரஸ் போன்சா மற்றும் பயிற்றுநர்கள் ஹரிந்தர் பால் சிங், ஆலன் சோய்சா ஆகியோர் முதலமைச்சரை சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.
உதயநிதியிடம் காட்டி...
டெல்லியில் கடந்த 9ந் தேதி அன்று நடைபெற்ற 3-வது சிஐஐ விளையாட்டு வணிக விருதுகள் 2025-இல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு வழங்கப்பட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலத்திற்கான விருதினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஸ்டாலினிடம் காண்பித்து, வாழ்த்து பெற்றார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?