குடவாசல் அருகே அன்னியூரில் வடக்கு ஒன்றிய பாமக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
Dec 09 2025
32
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வடக்கு ஒன்றிய பாமக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் வேணு.பாஸ்கரன் தலைமை வகித்தார், மாவட்டத் தலைவர் பழனி, உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் உலகநாதன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் கணேச.சண்முகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வலங்கை என்.மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள அன்னியூர் பிள்ளையார் கோயில் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு மயான கொட்டகை மற்றும் ஈமக்கிரியை மண்டபம் அமைத்து தர வேண்டும், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை அரசு மேற்கொள்ள வேண்டும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு மற்றும் அனைத்து சமுதாய மக்களுக்கும் முறைப்படியான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வருகின்ற 12- ந்தேதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெறும் இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?