குமரி மாவட்டத்திற்கு புதிய ரெயில்வே திட்டங்கள்: மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரெயில்கள், ரயில் நிறுத்தங்கள், ரயில் நீட்டிப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், தொலைநோக்கு திட்டங்கள் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து விஜய் வசந்த் எம்.பி. மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து பேசினார்.
கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் மக்கள் கோரிக்கையை வலியுறுத்திய விஜய் வசந்த் அவர்கள் கீழ்கண்ட முக்கிய கோரிக்கைகளையும் முன் வைத்தார். நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி வாராந்திர ரயில், கன்னியாகுமரி – ஹைதராபாத் தினசரி விரைவு ரயில் ஆகிய புதிய ரயில்களின் தேவையை முன் வைத்தார்.
ரயில்கள் நீட்டிப்பு
புதியதாக அறிமுகபடுத்த திட்டமிட்டுள்ள சென்னை அம்ரித் பாரத் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும், புனலூர் - மதுரை ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும், மங்களூர் – திருவனந்தபுரம் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்தல், ஹவ்ரா – திருச்சி ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்தல், திருநெல்வேலி வந்தேபாரத் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டித்தல், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி செல்லும் பயணிகளுக்காக திருவனந்தபுரம் – நாகர்கோவில் ரயில்களை நீட்டிக்க வேண்டும் எனவும், தாம்பரம் – நாகர்கோவில், ராமேஸ்வரம் – கன்னியாகுமரி ரயில்களை தினசரி சேவையாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
ரயில் நிறுத்தங்கள்
காந்திதாம் விரைவு ரயில் மற்றும் ஜாம்நகர் ரயில்கள் குழித்துறை ரயில் நிலையத்திலும், புனலூர்-மதுரை ரயில் பள்ளியாடி ரயில் நிலையத்திலும், திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரயில் இரணியல் ரயில் நிலையத்திலும் நின்று செல்ல வேண்டும் என கோரினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?