நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் 3 ஆவது அணு உலைக்கு மேம்படுத்தப் பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனி யம் எரிபொருளை ரஷ்யாவின் அணுசக்தி கழகம் அனுப்பி யுள்ளது. ரஷ்யாவின் அரசு நிறுவன மான அணுசக்தி கழகம் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் யூனிட் 3க்கு தேவையான ‘விவிஇஆர் -1000’ அணு எரிபொருளின் முதல் கட்டத்தை விமானம் மூலம் அனுப்பியுள்ளது. இந்த எரிபொருள், சைபீரியாவில் உள்ள நோவோசிபிர்ஸ்க் கெமிக்கல் கான்சன்ட்ரேட்ஸ் பிளான்ட் என்ற தொழிற் சாலையிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. 3ஆவது அணு உலை மையத்திற்குத் தேவையான எரிபொருளையும், செறி வூட்டபட்ட எரிபொருளையும் வழங்கு வதற்காக மொத்தம் 7 விமானப் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த முக்கிய முன்னேற்றத்தின் மூலம், யூனிட் 3 நேரடியாக 18 மாதங்கள் நீடிக்கும். நீட்டிக்கப்பட்ட எரி பொருள் சுழற்சியுடன் செயல்படத் தொடங்க முடியும். இது இந்தியாவில் உள்ள 1000 மெகாவாட் திறன் கொண்ட அணு உலைகளுக்கு முதல் முறையாகும். ஏற்கனவே யூனிட் 1 மற்றும் யூனிட் 2இல் பயன்ப டுத்தப் படும் மேம்பட்ட ‘டிவிஎஸ்-2எம்’ வகை அணு எரிபொருள் வடிவமைப்பு, செயல்திறனை அதிகரிக்கும். ரஷ்யாவின் கூட்டாண்மையுடன் உருவாக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையம், இந்தியாவின் மிகப் பெரிய அணுமின் திட்டமாகும். இதில் தற்போது இரண்டு அணு உலை கள் செயல்பாட்டில் உள்ளன. யூனிட்3 முதல் யூனிட்6 வரை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையத்தில் மொத்தம் 6,000 மெகாவாட்திறன் கொண்ட 6 ‘விவிஇஆர்-1000’ அணு உலை கள் இயங்கும். இதன் மூலம், இந்தியாவின் ஆற்றல் பாது காப்பு வலுப்பெறும், மேலும் சுத்த மான மின் உற்பத்தி திறன் குறிப்பிடத் தக்க அளவில் அதிகரிக்கும். வழக்கமாக முதல் மற்றும் 2ஆவது அணு உலையில் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிகோல்கள் ஒரு வருடம் மட்டுமே பயன்படுத்தப்ப டும். இதற்காக இரண்டு மாதம் மின் உற்பத்தியும் நிறுத்தப்படும். ஆனால் தற்பொழுது 3வது அணு உலைக்கு மேம்படுத்தப்பட்ட செறிவூட்டப்ட்ட யுரேனியம் எரிகோல்கள் பயன்படுத்தப் படுவதனால், ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை (18 மாதங்கள் ) மாற்றினால் போதும். தற்போது 2ஆவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணி களுக்காக மின் உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?