
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது ஓணம் பண்டிகை ஆகும். தமிழ்நாட்டில் பொங்கல் விழா சிறப்பு என்றால், கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்பு. தமிழ் மாதம் ஆவணியில் திருவோண நட்சத்திர நாளில் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அதாவது அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் வசிக்கும் கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த மாநிலமான கேரளாவிற்கு வருவார்கள்.ஓணம் பண்டிகை ஆவணி மாதத்தில் அஸ்தம் (அத்தம்) நட்சத்திர நாளில் தொடங்கி சித்திரை, சுவாதி, விஷாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் என்று இறுதியாக திருவோணம் நட்சத்திரம் வரை என 10 நாட்கள் கொண்டாடப்படுகின்றது.
இறுதி நாளான திருவோணம் நட்சத்திரத்துக்கு உரியநாளான வருகிற 5-ந்தேதி வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, ஓணம் சத்யா எனப்படும் பிரமாண்ட சைவ விருந்து வைத்து புத்தாடை உடுத்தி மகாபலி ராஜாவை வரவேற்கும் விதமாக சிறப்பாக கொண்டாடுகிறார்கள். அதன்படி வருகிற 5-ந் தேதி ஓணம் பண்டிகை சிறப்பாககொண்டாடப்பட உள்ளது.
ஓணம் பண்டிகையின் தொடக்க விழா எர்ணாகுளம் மாவட்டம் திருப்பணித் துறை நகராட்சி மற்றும் கேரள சுற்றுலா துறை சார்பில் நேற்று ராஜவீதிகளில் அத்தசமயம் எனப்படும் பாரம்பரிய கலாசார ஊர்வலத்துடன் தொடங்கியது. கேரள உள்ளாட்சி துறை மந்திரி ராஜேஷ் கலை விழாவை தொடங்கி வைத்தார். நடிகர் ஜெயராம் கலாசார ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலத்தில் கேரளாவின் பாரம்பரிய புலிக்களி கலைஞர்கள் உள்பட பல்வேறு கலைஞர்கள் பங்கேற்றனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாநில அளவிலான ஓணம் வாரவிழா திருவனந்தபுரத்தில் வருகிற 3-ந்தேதி தொடங்கும். இதையொட்டி நகரின் முக்கிய பகுதிகளிலும், கவடியார் முதல் கிழக்கு கோட்டை வரை மின்னொளி அலங்காரம் செய்யப்பட உள்ளது. 9-ந் தேதி ஓணம் வாரவிழா நிறைவாக திருவனந்தபுரம் கவடியார் முதல் கிழக்கு கோட்டை வரை கேரளாவின் பாரம்பரிய பெருமைகளை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலை, கலாசார ஊர்வலமும் நடைபெறும்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?