நாளிதழ் படித்தேன்..
தொலைக்காட்சி பார்த்தேன்.. கேளிகை விடுதியில் *தீ* பிடித்ததாம்..! காலிகள் நடனம் ஆடியபடியே.. போதையில் தீயில் பொசுங்கினராம்.!
மாலையில் இரவில்.. மங்கிய ஔியில்.. இரவினில் ஆட்டம் நடக்கிறது..! நாகரீகம் என்ற பெயரில்.. இது நகரங்களில் தொடர்ந்து நடக்கிறதே.!
உழைக்கிற கூலியை உடம்பைக் கெடுக்க குடித்தே வீதியில் கிடக்கும் ஏழையர் ஒருபுறத்தே..
இருக்கிற பணத்தை.. பதுக்கிய பணத்தை.. கேளிகை விடுதியில் இறைக்கும் மாந்தர்கள் ஒருபுறத்தே..
கோவா பெங்களூர் சென்னை.. மும்பாய்.. எங்கும் கூத்துகள் நடக்கிறதே..
இருப்பவன் குடிக்க.. கேளிகை நடத்த.. இச்சமுதாயம் அனுமதிக்கிறதே..!
கேளிகை ஆட்டம் மது மாது சூது.. யாவும் இரவினில் நடக்கிறதே..
இதனைபதாங்க இயலா பூமி.. இதோ பார் நெருப்பாய் வெடிக்கிறதே.!
*வே.கல்யாண்குமார்.*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?