சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி பள்ளிச் செயலர் கவிதாசன் தொடங்கி வைத்தார்

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி போட்டி பள்ளிச் செயலர் கவிதாசன் தொடங்கி வைத்தார்

மேட்டுப்பாளையம், ஆக. 11–


கோவை மாவட்டம் மேட்டுப்பாளை யத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் சி.பி.எஸ்.சி. தெற்கு மண்டலம் -1ஐச் சார்ந்த 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள மற்றும் மாணவியர்களுக்கான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கின.


ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் இருந்து 35-ற்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்கின்றன. நாக் அவுட் மற்றும் லீக் அடிப்படையில் நடைபெறும் இப்போட்டியில் 1000-திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். ஆகஸ்டு 11 முதல் 15 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் வீரருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்படவுள்ளன. தெற்கு மண்டலம்-1 அளவில் இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணி தேசிய அளவில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினைப் பெறும்.


சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ஆகஸ்டு 11 ஆம் தேதி காலை, போட்டிகளை முறையாகத் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் இரா.உமாமகேஸ்வரி வரவேற்றார். பள்ளி வளாகத்தில் தேசியக் கொடி, சி.பி.எஸ்.இ. கொடி மற்றும் பள்ளிக் கொடிகள் ஏற்றப்பட்டன. டாக்டர் கவிதாசன் தேசியக் கொடியையும், சி.பி.எஸ்.இ. கொடியைத் தெற்கு மண்டலம்-1 பார்வையாளர் ஆர்.ஆர் பாண்டிநாகராசு மற்றும் பள்ளிக் கொடியைப் பள்ளி முதல்வர் இரா.உமாமகேஸ்வரி ஆகியோர் ஏற்றி வைத்தனர்.


தொடக்கவிழாவில் சிறப்புரை யாற்றிய டாக்டர் கவிதாசன், ‘‘நம் தேசிய விளையாட்டான ஹாக்கியை பள்ளி மாணவ மாணவியரிடத்தில் கொண்டுசேர்க்கும் விதமாக ஆண்டு தோறும் சி.பி.எஸ்.இ. தெற்கு மண்டலம்-1 ஹாக்கி போட்டிகள் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் நடத்தப்பட்டு வருகின்றது. பள்ளி அளவில் ஹாக்கி விளையாட்டில் சிறந்து விளங்குகின்ற மாணவ மாணவியர் பலர் தேசிய அணியில் இடம்பிடித்துவருகின்றனர் என்பது பெருமைக்குரியது’’ என்றார்.


தொடர்ந்து, பள்ளியின் மருத்துவர் முருகேசன் விளையாட்டின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு வழிமுறைகளையும் விளக்கிக் கூறினார். பள்ளியின் துணை முதல்வர் சு.சக்திவேல் நன்றி கூறினார்.


போட்டிகளுக்கான நடுவர்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழ்நாடு ஹாக்கி யூனிட்டால் நியமிக்கப்பட்டுள்ளனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் உடற்கல்வி துணை இயக்குநர் டி.பி.அனிதா மற்றும் பயிற்சியாளர் யோகானந் ஆகியோர் கவனித்துக் கொள்கின்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%