சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக? - முதல்வருடனான சந்திப்பு குறித்து பிரேமலதா விளக்கம்
Aug 02 2025
10

சென்னை முகாம் அலுவலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். சந்திப்பின்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தது. அந்தக் கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 இடங்கள் வழங்கப்பட்டன. இதுதவிர ஒரு மாநிலங்களவை இடமும் வழங்கப்படுவதாக தேமுதிகவுக்கு உறுதி அளிக்கப்பட்டது.
ஆனால், கூட்டணி ஒப்பந்தத்தின்படி தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடத்தை அதிமுக வழங்கவில்லை. மாறாக அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலில் இடம் வழங்குவதாக அதிமுக அறிவித்தது. இதனால் தேமுதிக தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். அதைத்தொடர்ந்து, கூட்டணி நிலைப்பாட்டை ஜனவரியில் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். இதன்மூலம் அதிமுக கூட்டணியில் நீடிக்கவில்லை என்பதை தேமுதிக சூசகமாக தெரிவித்தது.
அதன்பின் திமுக, தவெக கட்சிகளுடன் தேமுதிக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?