சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வில் இன்று முதல் விருப்ப மனு துவக்கம்
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இன்று ஏராளமான அண்ணா தி.மு.க.வினர் விருப்ப மனு அளித்தனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ளது.
2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அண்ணா தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 15–ந்தேதி முதல் 23ந் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதனை அடுத்து இன்று விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து வழங்கினார்கள்.
‘‘தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற அண்ணா தி.மு.க.வினர் தலைமைக் கழகத்தில் இன்று முதல் 23.12.2025 செவ்வாய்க்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும்; முதல் நாளான இன்று நண்பகல் 12 மணி முதல், அதற்கான படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து, மேற்கண்ட காலத்திற்குள் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதனையடுத்து அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் கவுன்டர்கள் அமைக்கப்பட்டு விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. போட்டியிட விருப்பமுள்ள அண்ணா தி.மு.க.வினர் விருப்ப மனுக்களை வாங்கி அதை பூர்த்தி செய்து வழங்கினார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?