சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் என பெரும்பாலோனோரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் .
ஆனால் இது சரியா?
ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் திருமூலநாதர் என்ற பெயரில் சுயம்பு மூர்த்தியாக அருள் செய்கிறார்.
(கோயிலுக்குள் திருமூலட்டானக் கோயில் மேற்கு பிரகாரத்தின் மேல்பால் இருக்கின்றது).
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவார பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான இக்கோவில் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் பூலோக கைலாசம் என்றும் அழைக்கப்படுகிறது.
பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் கயிலையில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பி , இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்ய, இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவனார் , தைமாத பூசத்தில் நாட்டிய தரிசனம் தந்ததாக வரலாறு.
மேலும் சிவனுக்கும், சக்திக்கும் நடந்த போட்டி நடனத்தில், ஆடிய தில்லை காளியின் கோயில் நடராஜர் கோயில் அருகில் உள்ளது.
இத்தில்லை காளியை தரிசித்த பின்பே திருமூலநாதரையும் , நடராஜரையும் தரிசிக்க வேண்டும் என்ற மரபும் சொல்லப்படுகிறது.
கல்லார்க்கும் கற்றவர்க்கும்
களிப்பு அருளும் கனிப்பே!
காணார்க்கும் கண்டவர்க்கும்
கண்அளிக்கும் கண்ணே!
வல்லார்க்கும் மாட்டார்க்கும்
வரம் அளிக்கும் வரமே!
மதியார்க்கும் மதிப்பவர்க்கும்
மதிகொடுக்கும் மதியே!
நல்லார்க்கும் பொல்லார்க்கும்
நடுவில் நின்ற நடுவே!
நரர்களுக்கும் சுரர்களுக்கும்
நலம் கொடுக்கும் நலமே!
எல்லார்க்கும் பொதுவில்
நடனம் இடுகின்ற சிவமே!
என்னரசே! யான்புகலும்
இசையும் அணிந்து அருளே!
உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்;
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்;
அலகு இல் சோதியன்; இம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.

சிவசக்தி
நாப்பிராம்பட்டி
ஊத்தங்கரை
கிருஷ்ணகிரி மாவட்டம்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?