சீனாவில் லஞ்ச வழக்கில் முன்னாள் அதிகாரிக்கு தூக்கு தண்டனை

சீனாவில் லஞ்ச வழக்கில் முன்னாள் அதிகாரிக்கு தூக்கு தண்டனை


 

பெய்ஜிங்: சீ​னா​வின் சொத்து மேலாண்மை நிறு​வனம் ஒன்​றின் முன்​னாள் நிர்​வாகியை ஊழல் குற்​றச்​சாட்​டில் சீன அரசு நேற்று தூக்​கி​லிட்​டது.


சீனா ஹுவாரோங் சொத்து மேலாண்மை நிறு​வனத்​தின் துணை நிறு​வன​மாக 'சீனா ஹுவாரோங் இன்​டர்​நேஷனல் ஹோல்​டிங்ஸ் (சிஎச்​ஐஎச்)’ உள்​ளது. இதன் பொது மேலா​ள​ராக இருந்​தவர் பாய் தியான்​ஹுய். இவர் 2014 முதல் 2018 வரை திட்​டங்​களை செயல்​படுத்​து​வ​தில் 15.6 கோடி டாலர் லஞ்​சம் பெற்​ற​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது. இதில் அவர் குற்​ற​வாளி என நிரூபிக்​கப்​பட்​டதை தொடர்ந்து அவர் நேற்று காலை தூக்​கில் இடப்​பட்​ட​தாக சீன அரசின் ஊடக​ம் தெரி​வித்​துள்​ளது.


 

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உள்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த இன்று முதல் தடை


ஆஸ்திரேலிய சிறுவர், சிறுமியரின் வாழ்வை மாற்றும் சீர்திருத்தமாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

கென்பரா,


உலகம் முழுவதும் சமூக ஊடகங்களை அனைத்து தரப்பு மக்களும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர். சமூக ஊடகத்தை குழந்தைகளும் பயன்படுத்துவதால் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உடல்நலம், மன நலம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.


இதனிடையே, ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உள்பட்ட சிறுவர், சிறுமியர் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்பட அனைத்து வகையான சமூக ஊடகத்தை பயன்படுத்த தடை விதிக்க அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், சிறுவர், சிறுமியரின் சமூக வலைதள கணக்குகளை நீக்கவில்லையென்றால் சமூக ஊடக நிறுவனங்களுக்கு ரூ. 300 கோடி வரை அபராதம் விதிக்கவும் மசோதா நிறைவேற்றப்பட்டது.


இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உள்பட்ட சிறுவர், சிறுமியர் சமூக ஊடகங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கை ஆஸ்திரேலிய சிறுவர், சிறுமியரின் வாழ்வை மாற்றும் சீர்திருத்தமாக இருக்கும் என்று அந்நாடு பிரதமர் அல்பெனீஸ் தெரிவித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%