சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் சிபிஐ - காங். கடும் கண்டனம்
Jul 31 2025
24

சென்னை, ஜூலை 29 - மதுரை மக்கள வைத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு தமிழ்நாட்டின் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள் அரணாக ஒன்றுபட்டு நின்றதால் அவர் உரையாற்ற முடிந்தது. அவர், அவையில் முன்வைத்த கூர்மை யான விமர்சனங்களால் ஆளுங்கட்சியின் முகத்திரை கிழிந்து, அதன் பொய் முகம் நாட்டுக்கு காட்டப் பட்டது. இந்த அரசியல் விமர்சனத்துக்கு பொறுப் பாக பதில் அளிக்க திராணியற்ற ஆளுட் கட்சியின் வன்முறை கும்பலைச் சேர்ந்தவர், நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத் துள்ளார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தி ருக்கும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், “இது போன்ற கோழைத் தனமான மிரட்டலுக்கு கம்யூனிஸ்டுகள் ஒரு போதும் அஞ்சுவ தில்லை என்பதுதான் வரலாறு. அரசியல மைப்புச் சட்டம் வழங்கி யுள்ள கருத்துரிமையை பறிக்கும் கொலை மிரட்டலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடு மையாக கண்டிக்கிறது. கொலை மிரட்டல் செய்தவரையும், அவ ரது பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை வேரின் அடி நுனி வரை விசாரித்து, சதிகாரர்கள் அனை வரையும் கைது செய்து, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் காவல்துறைக்கு வேண் டுகோள் விடுத்துள்ளார். அதேபோல், கடும் கண்டனம் தெரிவித்தி ருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு.செல்வப் பெருந்தகை எம்எல்ஏ, “மக்க ளின் குரலை பிரதி பலிக்கும் வகையில் போராடி வருபவரை மிரட்டுவது, ஜனநாய கத்தையே தாக்கும் செயல்” என்றும் விமர்சித்திருக் கிறார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?