விருட்ச சாஸ்திரம்...!!
🌳 செண்பக மரத்தின் தாவரவியல் பெயர் மைக்கேலிய செம்பகா என்பதாகும். இது மேக்னோலியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
🌳 செண்பக மரம் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் அதிகமாக வளர்ந்து காணப்படுகிறது. இதனுடைய தாயகம் இந்தியா. பின் மற்ற நாடுகளான இந்தோனேசியா, மியான்மார், கலிஃபோர்னியா, மலேசியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பரவிற்று.
🌳 சாதாரணமாக செண்பக மரங்கள் முப்பது அடிக்கும் உயர்வாக வளரக்கூடியது. பருமன் 35 மீட்டர், அடிமரம் 20 மீட்டர் அளவில் இருக்கும். இதன் இலை 20-25 செ.மீ நீளமும், 4 செ.மீ அகலமும் கொண்டிருக்கும்.
🌳 காய்கள் கொத்துக் கொத்தாக இருக்கும். பழங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். பழங்களை பறவைகள் விரும்பி சாப்பிடும்.
🌳 இந்த மரம் வளரும் இடங்கள் மிகவும் செழிப்பாக இருக்கும், நீர் வளமும், மழை வளமும் அதிக அளவில் இருக்கும்.
🌳 மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் தானாகவே வளரும் செண்பக மரம், மேல்நோக்கி குவிந்த இலைகளையும், நறுமணமுள்ள மஞ்சள் மற்றும் வெள்ளை நிறமுள்ள மலர்களையும் உடையது.
🌳 செண்பக பூக்களில் இருந்து கிடைக்கும் கெட்டியான பசை, வேதியியல் பொருட்களால் கரைத்து எடுக்கப்பட்டு, பலவித வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.
🌳 செண்பக மரம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இலைகள் நீண்டு வளரக்கூடியவை. இலைகளின் மேற்புறம் பசுமையாகவும் பின்புறம் ரோமங்கள் நிறைந்திருப்பதாலும் காற்றில் கலந்திருக்கும் தூசுகளை அகற்றும் தன்மை படைத்தவை.
🌳 மஞ்சள் நிற மலர்களின் வாசனை காற்றோடு காற்றாகக் கலந்து, சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவதோடு ரம்மியமான ஒரு சூழலை உருவாக்கும். இதை சுவாசிப்பதன் மூலம் நம்மை மெய்மறக்கச் செய்யும்.
🌳 மலருக்காக வீடுகள் மற்றும் கோவில் நந்தவனங்களில் வளர்க்கப்படுகின்றன. இதன் இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவற்றுக்கு மருத்துவக்குணங்கள் உள்ளன.
செண்பக மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?
🏡 சாலையின் இருபுறம், வீட்டு முகப்பு, கோவில், குளக்கரை மற்றும் பொது இடங்களில் செண்பக மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
🏡 இரண்டு செண்பக மரங்களை வீட்டில் வளர்த்தால் சொர்க்கத்தை காணலாம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
🏡 மேலும், சௌபாக்ய விருட்சம் என்ற சாஸ்திரப் பெயரைக் கொண்டுள்ள இந்த மரத்தை வீட்டில் வளர்த்து செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் வளம் சேரும் என்பது ஐதீகம்.
🏡 செண்பக மரத்தை நம் வீட்டில் வைத்து வளர்த்தோம் என்றால் அது நமக்கு அதிர்ஷ்டத்தை தரும்.
செண்பக மரத்தை வீட்டின் எந்த திசையில் வளர்க்கலாம்?
🏡 செண்பக மரத்தை தென்மேற்கு, மேற்கு போன்ற திசைகளில் வளர்க்கலாம்.
Thanks and regards
A s Govinda rajan
மந்தாரை மரம் வீட்டில் வளர்க்கலாமா?
🌳 மலையாத்தி அல்லது மந்தாரை பேபியேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது தென்கிழக்காசியா, தென் சீனாவிலிருந்து மேற்கே இந்தியா வரையான பகுதிகளை தாயகமாகக் கொண்டது.
🌳 திருவாச்சி மரம் அல்லது மந்தாரை மரம் இன்று மிக அரிதாகக் காணப்படும் ஒரு குறுமரமாகிவிட்டது. சிருவாச்சி, இருவாச்சி, திரு ஆத்தி, மந்தாரை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
🌳 சிறியது முதல் நடுத்தரம் வரை உயரமான இம்மரம் 10-12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. கோடையில் இலைகளை உதிர்த்து விடுகின்றது. இதன் இலைகள் அடியும், நுனியும் இரண்டாகப் பிளவுபட்டு வளைந்த வடிவை உடையதாகக் காணப்படும்.
🌳 வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் ஐந்து இதழ்களைக் கொண்ட கவர்ச்சியான இதன் பூக்கள், 8-12 ச.மீ விட்டம் கொண்டவை. 15-30 ச.மீ வரை நீளம் கொண்ட இதன் பழங்கள் பல விதைகளை உள்ளடக்கியவை.
🌳 இது வெப்பவலயப் பகுதிகளில் மிகவும் விரும்பி வளர்க்கப்படுகின்ற அலங்காரத் தாவரங்களில் ஒன்றாகும். சிறப்பாக இதன் வாசனை உள்ள பூக்களுக்காக இவை விரும்பப்படுகின்றது.
🌳 உடலுக்கு நலம் தரும் திருவாச்சி மரம், வயிறு தொடர்பான அனைத்து பாதிப்புகளுக்கும் நிவாரணம் தரும், கை கால் வலிகளைப் போக்கும் தன்மை மிக்கது, உணவை உண்ணப் பயன்படும் வாழை இலைகளைப்போல திருவாச்சி இலைகள் பயன் தந்து, மனிதர்களின் உடல் மன வியாதிகளைப் போக்கும் இயல்புடையது.
🌳 'மந்தாரை உள்ள வரை நொந்தாரைக் காண முடியாது" என்று ஒரு மருத்துவப் பழமொழியே உண்டு. அந்த அளவுக்கு மருத்துவகுணங்களை கொண்டுள்ளது மந்தாரை.
🌳 இலைகளில் குவார் செட்டின், அஸ்ட்ரா காஸின், ஐசோகுவர்சிட்ரின், காம்ப்ஃபெரால் க்னூக்கோசைடு, அமினோ அமிலங்கள் மற்றும் ஆல்கலாய்டுகள் விதைகளில் உள்ளன. ஆந்தோசையனின், நட்டின், அப்பிஜெனின், போன்ற வேதிப்பொருட்களும் தாவரத்தில் உள்ளன.
🌳 தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் மந்தாரை மரமும், நடுவில் அலரிச் செடிகளும் நடப்பட்டு இருப்பதைக் காணலாம். இதற்குக் காரணம் சூரிய வெப்பத்தை தார் ரோடு உறிஞ்சிக் கொள்ளும் போது, அலரிச் செடியும், மந்தாரைச் செடியும் அதைக் குளிர்ச்சியாக மாற்றி காற்றில் பரப்பி விடுகிறது என்று நிரூபணமாகியிருக்கிறது.
மந்தாரை மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?
🏡 வீட்டில் மந்தாரை மரங்களை வளர்த்தால் முன்னோர்கள் ஆசி கிடைப்பதோடு குழந்தைகள் படிப்பு நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் ஏற்படும், வியாபாரம் பெருகும்.
மந்தாரை மரத்தை வீட்டின் எந்த திசையில் வளர்க்கலாம்?
🏡 தெற்கு, மேற்கு பகுதிகளில் மந்தாரை மரத்தை வளர்க்கலாம்.
Thanks and regards
A s Govinda rajan
வாகை மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?
🌳 வாகை அல்லது தூங்குமூஞ்சி மரம் என அழைக்கப்படும் இம்மரம் தெற்காசியாவைப் பூர்வீகமாக கொண்ட மரமாகும்.
🌳 இம்மரம் பிற வெப்பமண்டல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றது. வாகை மரம் வலுவான மரமாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் பழமையான மரங்களுக்குள் ஒன்றாகவும் கருதப்படுகின்றது.
🌳 வாகை மரம் மற்ற மரங்களைப் போல் இல்லாமல் இரவிலும் ஆக்ஸிஜனை வெளியிடும். 15மீ வளர்ந்த மரம் ஆண்டொன்றுக்கு 28.5 டன் கார்பன்-டை-ஆக்ஸைடை உட்கொள்வதாகக் கூறப்படுகிறது. இது அதிகபட்சமாக 25மீ உயரமும், 40மீ சுற்றளவும் வளரக்கூடியது.
🌳 கிளைகள் அகலப்பரந்து ஒரு குடைபோலக் காணப்படும். இது பலத்தண்டுகளையுடையதாகவும், பரந்து வளரக்கூடியதாகவும் உள்ளது.
🌳 அந்திசாயும் வேளையில் இலைகளைக் கீழ் நோக்கிக் தொங்கவிட்டு, தேக்கியதில் மீதமிருக்கும் நீர்த்துளிகளை, மழைச்சாரலைப் போலத் தனது எல்லைக்குள் தெளித்து குளிர்வித்து விடும். இச்சிறப்புத் திறமை இந்த மரத்துக்கு மட்டுமே உண்டு. எனவே இதற்குப் பொறுத்தமாக 'ரெயின் ட்ரீ - மழை மரம்" என்று பெயர்.
🌳 முருங்கை இலையைப் போன்ற இலைகளுடன், சீகைக்காயைப் போன்ற காய்களைக் கொண்டிருக்கும். இலை தொடக்கத்தில் கரும்பச்சையிலும் இரவு நேரங்களில் மூடிக் கொள்ளும் பண்புடையதாகவும், முதிர்ந்த நிலையில் பழுப்பு நிறத்திலும் காம்புகளுடன் இறுகிய அமைப்பிலும் காணப்படும்.
🌳 இளமஞ்சள்ஃவெண்நிறம் உடைய கொத்தான மகரந்தத் தாள்களை உள்ளடக்கிய மணமிக்க பூக்களை உடையது. இந்த மரம், மருத்துவத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது.
🌳 இலைகளிலும், காய்களிலும் நீர், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப் பொருள், உலோக உப்புகள் அடங்கியுள்ளன. இலைகளை உலர்த்தினால் 4 சதவீத அளவில் நைட்ரஜன் கிடைக்கும். இதன் காய்களை இடித்துத் தூளாக்கி, கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கலாம். மரப்பட்டையில் ஆல்கலாய்டுகள் உள்ளன.
🌳 இதன் இலை ஆடு, மாடுகளுக்குத் தீவனமாக உதவுகிறது, நிலத்திற்கு தழையுரமாகிறது. வீட்டுக்குத் தேவையான தூண், கதவு, ஜன்னல், உத்திரம், மரச்சாமன்கள், மரச் செக்குகள், மேஜை, நாற்காலி செய்யவும், காகிதம் தயாரிக்கவும் மற்றும் ஏழை மக்கள் அடுப்பெரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது. மண்ணரிப்பையும் தடுக்கிறது. இம்மரத்தின் பிசினிலிருந்து கோந்து தயாரிக்கப்படுகிறது.
🌳 வாகை மரம் மன்னர்கள் காலத்தில், வெற்றியின் அடையாளமாக இம்மரத்தின் மலர்களை தான் சூடுவார்கள். அதனால் தான் 'வெற்றி வாகை" என்ற சொல்லே உருவானது. வெற்றியின் அடையாளமான இம்மரம், விவசாயிகளையும் வருமானத்தில் வெற்றிபெற வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
வீட்டில் வாகை மரத்தை வளர்க்கலாமா?
🏡 இம்மரத்தை வேலியோரங்கள், காட்டோடைகள், காலியாக உள்ள இடங்களில் ஒன்றிரண்டு மரங்களை நட்டு வைப்பது நலம். மண்கண்டம் குறைவாக உள்ள நிலங்கள், உவர், அழல் நிலங்கள், உப்புக்காற்று உள்ள கடற்கரை ஓரங்கள், சுண்ணாம்புச் சத்து நிறைந்த நிலம் என அனைத்து வகை நிலங்களிலும் வளரும்.
வீட்டின் எந்த திசையில் வாகை மரத்தை வளர்க்கலாம்?
🏡 வீட்டின் தென்மேற்கு பகுதியில் வளர்ப்பது சிறப்பானது.
Thanks and regards
A s Govinda rajan
: பவளமல்லி மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?
🌼 பவழமல்லி அல்லது பவளமல்லி அல்லது பாரிஜாதம் என்னும் இம்மரம் தெற்காசிய நாடுகளில் வளரும். பவளமல்லியின் அறிவியல் பெயர் லேஉவயவொநள யசடிழச-வசளைவளை ஆகும். பவளமல்லி மரம் சிறு மரவகையைச் சேர்ந்தது. இதன் மலர் தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலராக சிறப்பிடம் பெறுகின்றது.
🌼 பவழ (பவள) நிறக் காம்பும், வெண்ணிறமான இதழ்களும் உடைய பூக்களை கொண்டது. இதற்கு தனிச் சிறப்பான நறுமணம் உண்டு. குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத் தொடங்கும். இம்மரம் இருக்கும் இடமே நறுமணம் வீசும். இந்த மலரை சேடல் என்றும் குறிப்பிடுவர்.
🌼 இம்மரம் 3-4 மீட்டர் உயரத்திற்கு மிக விரைவாக வளரும். இந்த மரம் வளமான மண்ணில் நன்கு வளரும். இதற்கு சிறிது வெய்யிலும், நிழலும் தேவைப்படும். நீர் தேங்காத இடத்தில் நன்கு வளரும்.
🌼 இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் கூரான முனைகளுடையவையாகக் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்திருக்கும் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். கிளை நுனிகளில் பூக்கள் பூக்கும். இப்பூக்கள் 5-7 இதழ்களை கொண்டவை. பூவின் வாசம் 100 அடி சுற்றளவுக்கு வீசும் தன்மை கொண்டது.
🌼 இதன் காய்கள் தட்டையாக, வட்ட வடிவில் காணப்படும். இரு விதைகளை கொண்டிருக்கும். இந்த மரம் ஆண் மரம் தான். தன்மகரந்தச் சேர்க்கையால் காய்கள் விடும்.
🌼 ஆயுர்வேத மருத்துவத்தில் பவளமல்லி விதைகளும், இலைகளும், பூக்களும் வயிற்றுத் தொந்தரவு, மூட்டுஃஎலும்பு வலி, காய்ச்சல், தலைவலி போன்றவற்றிற்கும் இன்னும் பல விதங்களிலும் மருந்தாகப் பயன்படுகின்றன.
🌼 இம்மரம் மண் அரிப்பைத் தடுத்து, மண்ணிலுள்ள நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பேட் போன்ற சத்துகளை வீணாக்காமல் தடுக்கிறது.
வீட்டில் பவளமல்லி மரத்தை வளர்க்கலாமா?
🏡 வீடுகளில் பவளமல்லி மரங்களை வளர்த்தால் முன்னோர்கள் ஆசி கிடைப்பதோடு குழந்தைகள் படிப்பு நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் ஏற்படும், வியாபாரம் பெருகும்.
பவளமல்லி மரத்தை எந்த திசையில் வளர்க்கலாம்?
🏡 பவளமல்லி மரங்களை தெற்கு, மேற்கு திசைகளில் வளர்ப்பது நல்லது.
Thanks and regards
A s Govinda rajan
வீட்டில் நெல்லிக்காய் மரத்தை வளர்க்கலாமா?
நெல்லி உயரமான இலையுதிர் மரம் ஆகும். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் நெல்லிக்காய் மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைகள் கொத்துக், கொத்தாக அடர்த்தியாக வளரும்.
ஒவ்வொரு காம்பிலும் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்தில் இலைகள் அமைந்திருக்கும். இலைக் காம்பை ஒட்டியே சின்னஞ்சிறு வெள்ளை நிறப்பூக்கள் அரும்பும். வேனில் காலத் துவக்கத்தில் பூ ஆரம்பித்து வேனில் காலம் முடிவதற்குள் கனி விட தொடங்கி விடுகிறது.
மற்றொன்று தோப்பு அல்லது காட்டு நெல்லிக்காய் எனும் பெரிய அளவிலான பச்சை நெல்லிக்காய் ஆகும். இது மலைகளில் நன்றாக விளையும். மற்றைய நிலங்களில் சுமாராக விளையும். தென்னிந்தியாவில் அதிகமாக கிடைக்கும்.
இவை இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. இதன் இலைகள் நீண்டும், அகலம் குறைவாகவும், இளம் மஞ்சள் நிறக் காய்களை உடைய மரமாகவும் இருக்கும். இதன் காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகளை ஒருங்கே பெற்றது.
நெல்லிக்காய் அறுசுவையையும் தன்னுள் கொண்டது.
நெல்லிக்காய் சாப்பிட்டு விட்டு கடையிசில் தண்ணீர் குடிக்கும்போது இனிக்கும்.
நெல்லிக்காய் சாப்பிடுவதால் இரத்தத்தின் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது. மேலும் நெல்லிக்காய் அடிக்கடி உண்டு வந்தால் என்றும் இளமையாக இருக்கலாம்.
நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும்.
நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகிவிடும்.
வீட்டில் நெல்லிக்காய் மரம் இருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிக்காய் மரம் திகழ்வதால் நெல்லிக்காய் மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி மரம்.
அறுசுவைகளும் சேர்ந்திருக்கும் இந்த நெல்லிக்காய் மரத்தினை, நம் வீட்டில் வளர்த்து வருவதன் மூலம் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். குறிப்பாக பெரிய நெல்லிக்காய்களை பைரவருக்கு வைத்து, பூஜை செய்து மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பது மிகவும் சிறப்பு.
எங்கு வளர்க்கலாம்?
நெல்லிக்காய் மரத்தை வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது. இதற்கு காரணம் நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. இதனால் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
மேலும் நெல்லிக்காய் மரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுக முடியாது. நெல்லி மரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
வீட்டில் பாத்திரங்களை கழுவும் நீர் செல்லும் பாதையில் நெல்லிக்காய் மரத்தை வளர்க்கலாம்.
நெல்லிக்காய் மரம் வீட்டின் தோட்டத்தில் வளர்க்க உகந்த மரமாகும்.
எந்த திசையில் வளர்க்கலாம்?
வீட்டின் வடகிழக்கு திசையில் நெல்லிக்காய் மரத்தை வளர்க்கலாம்.
Thanks and regards
A s Govinda rajan
Kodambakkam Chennai
600024