சென்ட்ரல் நிலையத்தில் ரயில்களில் அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்திய 96 பேர் மீது வழக்குப்பதிவு

சென்ட்ரல் நிலையத்தில் ரயில்களில் அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்திய 96 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை:

சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தில் கடந்த 7 மாதங்​களில், ரயில்​களில் அபாயச் சங்​கி​லியை பிடித்து இழுத்து நிறுத்​தி​யதற்​காக, 96 பேர் மீது ரயில்வே பாது​காப்​புப் படை​யினர் வழக்​குப்​ப​திந்​து, அபராதம் விதித்​துள்​ளனர். தமிழகத்​தில் முக்​கிய ரயில் நிலை​ய​மாக சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யம் திகழ்​கிறது.


இங்​கிருந்து வடமாநிலங்​கள், தமிழகத்​தின் மேற்கு மாவட்​டங்​களுக்கு நாள்​தோறும் 100-க்​கும் மேற்​பட்ட விரைவு ரயில்​கள் வந்து செல்​கின்​றன. இதுத​விர, சென்ட்​ரல் புறநகர் ரயில் நிலை​யத்​திலிருந்து 150-க்​கும் மேற்​பட்ட மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. எனவே இந்த ரயில் நிலை​யத்​தில் தினசரி 5 லட்​சம் பேர் வந்து செல்​கின்​றனர்.


இந்த ரயில் நிலை​யத்​தில் இயக்​கப்​படும் ரயில்​களில் விதி​மீறலில் ஈடு​படு​வோர் மீது ரயில்வே பாது​காப்​பு படை​யினர் வழக்​கு​ப​திந்​து, நீதி​மன்​றம் மூல​மாக அபராதம் விதித்து வரு​கின்​றனர். அந்த வகை​யில், அற்​பக் காரணங்​களுக்​காக, அபாயச்சங்​கி​லியை பிடித்து இழுத்து ரயில்​களை நிறுத்​து​வோர் மீது வழக்​குப் பதிந்து அபராதம் விதிக்​கப்​படு​கிறது.


ரயில் செல்​வ​தில் தாமதம்: ரயில் பயணி​களின் அவசர மருத்​து​வத் தேவை மற்​றும் எதிர்​பா​ராத நிகழ்​வு​களுக்கு அபாயச் சங்​கி​லியை இழுத்து ஓடும் ரயிலை நிறுத்​தலாம். ஆனால் தேவை​யின்றி அபாயச் சங்​கி​லியை பிடித்து இழுத்து நிறுத்​து​வ​தால், ரயில் செல்​வ​தில் தாமதம் ஏற்​படு​கிறது. இவ்​வாறு சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தில் கடந்த 7 மாதங்​களில் தேவை​யின்றி அபாயச் சங்​கி​லியை இழுத்து நிறுத்​தி​ய​தாக 96 பேர் மீது ரயில்வே பாது​காப்​புப் பிரி​வினர் வழக்​கு பதிந்​துள்​ளனர்.


இதுகுறித்​து, சென்னை சென்ட்​ரல் ஆர்​பிஎஃப் ஆய்​வாளர் மதுசூதன ரெட்டி கூறிய​தாவது: ரயில்வே சட்​டம் 141 பிரி​வின் கீழ், தேவை​யின்றி ரயில் அபாயச் சங்​கி​லியை பிடித்து இழுத்​தால், சம்​பந்​தப்​பட்​டோருக்கு ரூ.1,000 அபராதம் அல்​லது 6 மாத சிறைத் தண்​டனை விதிக்​கப்​படும்.


அதன்​படி, சென்னை சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​துக்கு உட்​பட்ட பகு​தி​களில் விதி​களை மீறி, ரயில்​களில் அபாயச் சங்​கி​லியை இழுத்​த​தாக, நடப்​பாண்​டில் ஜனவரி முதல் ஜூலை வரை 96 பேர் மீது வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்டு நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தி, அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த 2023-ல் 210 பேர் மீதும், 2024-ல் 217 பேர் மீதும் வழக்​கு​கள் பதி​யப்​பட்​டு, அபராத​மும்​ வி​திக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%