சென்னை உள்பட பல இடங்களில் வேலைக்கு செல்லும் பெண்களை மயக்கி கேரள வாலிபர் உல்லாசம்; அதிரடி காட்டிய போலீசார்

சென்னை உள்பட பல இடங்களில் வேலைக்கு செல்லும் பெண்களை மயக்கி கேரள வாலிபர் உல்லாசம்; அதிரடி காட்டிய போலீசார்



பெங்களூர், டெல்லி ஆகிய இடங்களுக்கும் சென்று இதுபோன்று சாஜிவ் மயக்கி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

சென்னை,


சென்னை கோயம்பேட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் வாலிபர் ஒருவர் பெண்ணை அழைத்து சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் அவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி உனக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி தருகிறேன் என தெரிவித்துள்ளார்.


தி.நகருக்கு சென்று புதிதாக நகைகளை வாங்கி தருகிறேன் எனக்கூறி பழைய நகைகளை கழற்றி தருமாறும் கூறியிருக்கிறார். இதனை நம்பி வாலிபருடன் உல்லாசம் அனுபவித்த பின்னர் பெண் அணிந்திருந்த தாலி செயின், தங்க கம்மல் ஆகியவற்றை பறித்து கொண்டு வாலிபர் தப்பி சென்றுள்ளார்.


இந்த சம்பவம் கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் கோயம்பேடு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ் பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. வாலிபரின் செல்போன் எண்ணை வைத்து அவரது முகவரியை போலீசார் கண்டுபிடித்தனர். இதில், அவருடைய பெயர் சாஜிவ் என்பது தெரிய வந்தது. கேரளாவை சேர்ந்த அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள்.


சாஜிவ் கோயம்பேட்டில் கைவரிசை காட்டியது போன்று திண்டுக்கல்லிலும் பெண்ணை மயக்கி லாட்ஜில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துவிட்டு நகையை பறித்து சென்று உள்ளார். இது தொடர்பாக திண்டுக்கல் போலீசார் சாஜிவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுபற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி உள்ளது. இதனை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் காட்டி உறுதி செய்த போலீசார் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாஜிவை கோயம்பேடு வழக்கில் கைது செய்தனர்.


கடந்த மாதம் 21-ந்தேதி கோயம்பேடு போலீசாரால் கைது செய்யப்பட்ட சாஜிவ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு தொடர்பான ஆவணங்கள் எல்லாவற்றையும் கோர்ட்டில் தாக்கல் செய்து சாட்சி விசாரணையையும் விரைவாக முடித்துள்ளார்.


இதனை தொடர்ந்து, எழும்பூர் 5-வது மாஜிஸ்திரேட் ராஜேஷ் ராஜ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாஜிவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளார். லாட்ஜில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து இந்த வழக்கில் துப்பு துலக்கிய போலீசார் விரைவாக தண்டனை வாங்கி கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டு உள்ள நிலையில் வாலிபர் சாஜில் திருமணம் ஆகி 3 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார். இருப்பினும் அவருக்கு கூலி வேலைக்கு செல்லும் நடுத்தர வயதை சேர்ந்த பெண்கள் மீது அதிக நாட்டம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கேரளாவிலும் இதுபோன்று அவர் பெண்களை மயக்கியதாக கூறப்படுகிறது.


இதுதொடர்பாக எர்ணாகுளம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். பெங்களூர், டெல்லி ஆகிய இடங்களுக்கும் சென்று இதுபோன்று சாஜிவ் மயக்கி இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் சாஜிவால் பெண்கள் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அது பற்றி புகார் அளிக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோன்று பாதிக்கப்பட்ட பெண்கள் யாராவது புகார் அளித்தால் அந்த வழக்குகளிலும் சாஜிவை கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%