சென்னை விமான நிலையத்தில் ரூ.2.3 கோடி தங்கம் பறிமுதல்: ஊழியர் கைது
Aug 20 2025
17

சென்னை, ஆக.19-
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து தனியார் விமானம் வந்தது. அதில் துபாயில் இருந்து சென்னை வந்து விட்டு இலங்கை செல்வதற்காக இலங்கையைச் சேர்ந்த 3 இணைப்பு விமான பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள கழிவறைக்கு சென்றுவிட்டு வெளியே வந்து இருக்கையில் அமர்ந்தனர்.
இதற்கிடையில் விமான நிலையத்தில் தரை தள ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் ஒருவர், கழிவறைக்கு சென்று விட்டு சிறிது நேரம் கழித்து வெளியில் வந்தார். இவற்றை ரகசியாக கண்காணித்த சுங்க இலாகா அதிகாரிகள், ஒப்பந்த ஊழியரை பிடித்து விசாரித்தனர். அவரை சோதனை செய்தபோது ஆடைகளுக்குள் 2.5 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.2.3 கோடி ஆகும். ஒப்பந்த ஊழியரிடம் விசாரித்த போது, இலங்கையைச் சேர்ந்த 3 இணைப்பு விமான பயணிகளும் அந்த தங்க கட்டிகளை துபாயிலிருந்து கடத்தி வந்து விமான நிலைய கழிவறை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்து உள்ளனர். பின்னர் எதுவும் தெரியாததுபோல் இலங்கை செல்வதற்காக காத்திருந்தனர். மேலும் கழிவறையில் உள்ள தங்கக் கட்டிகளை வெளியில் எடுத்து சென்று கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்கும்படி கூறியதால் அந்த தங்கத்தை மறைத்து வைத்து கொண்டு ெசல்ல முயன்றது தெரிந்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் இலங்கை செல்வதற்கு தயாராக இருந்த 3 இலங்கை பணிகளையும், இதற்கு உடந்தையாக இருந்த விமான நிலைய ஒப்பந்த ஊழியர் என 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?