செப்.15, 16, 17 தேதிகளில் அண்ணா 117-வது பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள்: சென்னையில் 15-ம் தேதி இபிஎஸ் உரை

செப்.15, 16, 17 தேதிகளில் அண்ணா 117-வது பிறந்தநாள் பொதுக்கூட்டங்கள்: சென்னையில் 15-ம் தேதி இபிஎஸ் உரை

சென்னை:

அ​தி​முக சார்​பில் வரும் செப்​.15 முதல் 17-ம் தேதி வரை 3 நாட்​ளுக்கு அண்ணா பிறந்​த​நாள் பொதுக்​கூட்​டங்​கள் நடை​பெற உள்​ளன.


இது தொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அதி​முக சார்​பில் பேரறிஞர் அண்​ணா​வின் 117-ஆவது பிறந்த நாளை முன்​னிட்டு செப்​.15 முதல் 17-ம் தேதி வரை 3 நாட்​கள், அண்​ணா​வின் பிறந்த நாள் விழா பொதுக்​கூட்​டங்​கள் கட்சி அமைப்பு ரீதி​யாக செயல்​பட்டு வரும் 82 மாவட்​டங்​களி​லும்; கட்சி அமைப்​பு​கள் செயல்​பட்​டுக் கொண்​டிருக்​கும் புதுச்​சேரி, ஆந்​திரா உள்​ளிட்ட பிற மாநிலங்​களி​லும் நடை​பெற உள்​ளன.


பொதுக்​கூட்​டங்​கள் நடை​பெற உள்ள இடங்​கள், அவற்​றில் கலந்​து​கொண்டு சிறப்​புரை​யாற்​று​வோர் விபரங்​கள் அடங்​கிய பட்​டியல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. 15-ம் தேதி தென் சென்​னை, வடக்கு (மேற்​கு) மாவட்​டம் சார்​பில் நடை​பெறும் பொதுக்​கூட்​டத்​தில் நான் பங்​கேற்று உரை​யாற்​றுகிறேன். கட்சி எம்​எல்​ஏக்​களும், கட்​சி​யின் சார்பு அணி​களின் நிர்​வாகி​களும், தாங்​கள் சார்ந்த மாவட்​டத்​தில் நடை​பெற உள்ள பொதுக்​கூட்​டங்​களில் கலந்​து​கொள்​ளு​மாறு கேட்​டுக்​கொள்​கிறேன்.


மாவட்ட செய​லா​ளர்​கள், தங்​கள் மாவட்​டத்​தில் நடை​பெற உள்ள பொதுக்​கூட்​டத்​துக்​கான நிகழ்ச்​சிகளை எம்​.ஜி.ஆர். மன்​றம், ஜெயலலிதா பேர​வை, எம்​.ஜி.ஆர். இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, அண்ணா தொழிற்​சங்​கம், வழக்​கறிஞர் பிரிவு, சிறு​பான்​மை​யினர் நலப் பிரிவு, விவ​சாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்​துவ அணி, இலக்​கிய அணி உள்​ளிட்ட கட்​சி​யின் பல்​வேறு அமைப்​பு​களைச் சேர்ந்த நிர்​வாகி​களு​ட​னும், உள்​ளாட்சி அமைப்​பு​களின் இந்​நாள், முன்​னாள் பிர​தி​நி​தி​கள் மற்​றும் கூட்​டுறவு சங்​கங்​களின் முன்​னாள் பிர​தி​நி​தி​களு​ட​னும் இணைந்​து, சிறப்​புப் பேச்​சாளர்​களு​டன் தொடர்​பு​கொண்​டு, பொதுக்​கூட்​டங்​களை ஏற்​பாடு செய்து சிறப்​பாக நடத்த வேண்​டும்.


கட்சி அமைப்பு ரீதி​யாக செயல்​பட்டு வரும் மாவட்​டங்​களுக்கு உட்​பட்ட அனைத்து இடங்​களி​லும், புதுச்​சேரி, கர்​நாட​கா, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, மகா​ராஷ்டி​ரா, கேரளா, புதுடெல்லி மற்​றும்அந்​த​மான் உள்​ளிட்ட பிற மாநிலங்​களி​லும், 15-ம் தேதி அண்​ணா​வின் உரு​வச் சிலைகளுக்​கும், படங்​களுக்​கும் மாலை அணி​வித்து இனிப்பு வழங்கி சிறப்​பிக்​கு​மாறு கேட்​டுக்​கொள்​கிறேன். இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%