ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார் சனே டகைச்சி

ஜப்பானின் முதல் பெண் பிரதமரானார் சனே டகைச்சி



ஜப்பானின் முதல் பெண் பிரதமர் சனே டகைச்சி

டோக்கியோ: ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சியை அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளது.


பிரதமரை தேர்ந்தெடுக்கும் கீழ் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்​டிபி) வேட்பாளர் சனே டகைச்சி 237 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகளைவிட 4 வாக்குகள் கூடுதலாக சனே டகைச்சி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சியின் தலைவர் யோஷிகோகோ 149 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.


இதையடுத்து, சனே டகைச்சி புதிய அமைச்சரவையை உருவாக்க உள்ளார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால், கூட்டணிக் கட்சிகள் இடம்பெறும் வகையில் அவரது அமைச்சரவை இருக்கும் எனக் கூறப்படுகிறது.


முன்னதாக, லிபரல் ஜனநாயகக் கட்சியின் (எல்​டிபி) தலை​வராகவும், நாட்டின் பிரதமராகவும் இருந்த ஷிகெரு இஷி​பா, ஓராண்​டுக்​குப் பிறகு பதவி வில​கு​வ​தாக ஏற்​கெனவே அறி​வித்​திருந்​தார். இதன்படி கடந்த மாதம் அவர் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார்.


இதையடுத்து, லிபரல் டெமாக்​ரடிக் கட்​சி​யின் புதிய தலை​வரை தேர்ந்​தெடுப்​ப​தற்​கான தேர்​தல் கடந்த 4-ம் தேதி டோக்​கியோ​வில் நடை​பெற்​றது. சனே டகைச்சி 183 வாக்குகளும், வேளாண் அமைச்​சர் ஷிஞ்​சிரோ கொய்​சுமி 164 வாக்குகளும் பெற்றனர். கட்​சிக்​குள் நடை​பெற்ற வாக்​கெடுப்​பில் சனே டகைச்சி வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது நாடாளுமன்றத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%