டிரேக் கடலில் ரிக்டர் 7.4 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அர்ஜென்டினா,
தென் அமெரிக்காவிற்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் அமைந்துள்ள நீர்நிலையான டிரேக் பாசேஜ் பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 7.46 மணியளவி ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகி உள்ளது.
டிரேக் கடலில் 36 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 60.26 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 61.85 டிகிரி மேற்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிலியின் தெற்கு முனைகள் மற்றும் அண்டை நாடான அர்ஜென்டினாவுக்கு அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?