டெல்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் மூடுபனியால் 7 பேருந்துகள், 3 கார்கள் மோதி தீ விபத்து: 4 பேர் பலி
மதுரா: உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள டெல்லி - ஆக்ரா விரைவுச்சாலையில், அடர்ந்த மூடுபனி காரணமாக இன்று காலை 7 பேருந்துகளும், 3 கார்களும் மோதிக்கொண்டு தீப்பிடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர்.
மதுராவில் உள்ள டெல்லி - ஆக்ரா விரைவுச்சாலையில் இன்று காலையில் மூடுபனியால் ஏற்பட்ட குறைந்த காணும் திறன் காரணமாக பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இந்த மோதலுக்குப் பிறகு பல வாகனங்கள் தீப்பிடித்தன.
இதுகுறித்து பேசிய மதுரா மூத்த காவல் கண்காணிப்பாளர் ஸ்லோக் குமார், “இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மதுராவில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் நடந்த ஒரு பெரிய சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர். 7 பேருந்துகள் மற்றும் 3 கார்கள் அடர்ந்த மூடுபனி காரணமாக மோதிக்கொண்டு தீப்பிடித்தன.
இந்தச் செய்தி எங்களுக்குக் கிடைத்தவுடன், தீயணைப்புத் துறை, உள்ளூர் காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தைச் சேர்ந்த குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. தேடுதல் மற்றும் மீட்புப் பணி இப்போது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இதுவரை, நான்கு பேர் உயிரிழந்ததை எங்களால் உறுதிப்படுத்த முடிகிறது.
சுமார் 25 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; இருப்பினும், அவர்களில் யாருக்கும் கடுமையான காயம் ஏற்படவில்லை. அவர்கள் தற்போது தேவையான மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருகின்றனர். மேலும், இங்கு இருக்கும் மீதமுள்ளவர்களை அரசு வாகனங்கள் மூலம் அவர்களது வீடுகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறோம்.” என்றார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?