டெல்லி செங்கோட்டை வளாகத்திற்குள் நுழைய முயன்ற வங்காள தேசத்தினர் 5 பேர் கைது
Aug 07 2025
13

புதுடெல்லி,
நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார். இதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மறுபுறம், பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டை வளாகத்திற்குள் ஐந்து பேர் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த ஐந்து பேரும் வங்கதேச நாட்டவர்கள் என்பது தெரியவந்தது.தற்போது அவர்களைக் கைது செய்து, செங்கோட்டை வளாகத்திற்குள் ஏன் நுழைய முயற்சித்தார்கள் என்ற அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "பிடிபட்ட ஐந்து பேரும் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள். டெல்லியில் கூலித் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களிடமிருந்து வங்கதேச நாட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது," என்றனர். டெல்லி செங்கோட்டைப் பகுதியில் வங்கதேச நாட்டவர்கள் அத்துமீறி நுழைய முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?