
உலக பெரும் பணக்காரர் ஆன எலான் மஸ்க் ஸ்டார்லிங், டெஸ்லா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
உலக பணக்காரர்களில் ஒருவரும் பிரபல தொழிலதிபருமானவர் எலான் மஸ்க். ‘டெஸ்லா’ என்ற நிறுவனத்தை தொடங்கி மின்சார கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுகிறார். டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி பதவியில் உள்ள எலான் மஸ்க்குக்கு 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.88.32 லட்சம் கோடி) சம்பளமாக தர அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளுக்கான சம்பளமாக வழங்கப்பட உள்ள இதனை பணமாக தராமல் ‘டெஸ்லா’ நிறுவனத்தின் பங்குகளாக தரப்பட உள்ளன. இதன்மூலம் உலகிலேயே முதன்முறையாக 1 டிரில்லியன் டாலர் சம்பளம் பெறுபவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக எலான் மஸ்க் ஆகிறார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?