செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
தஞ்சாவூர்: ஆன்லைன் விளையாட்டில் ரூ.50 ஆயிரத்தை இழந்த ஐ.டி. ஊழியர் தற்கொலை
Aug 11 2025
146
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் அரசமர தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் சுரேஷ்குமார் (22 வயது). ஐ.டி.ஊழியரான இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது மொபைல் போனில் ஆன்லைன் கேம் விளையாடியுள்ளார். அதில் சுரேஷ்குமார் ரூ.50 ஆயிரத்தை இழந்துள்ளார்.
பணத்தை இழந்தது முதல் சுரேஷ்குமார் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுரேஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%