
சென்னை:
'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் ஆறு நாட்களுக்கு, சில இடங்களில் மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 12 செ.மீ., மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம், சின்னக்கல்லாரில் 8 செ.மீ., நீலகிரி மாவட்டம் நடுவட்டம், திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து பகுதியில் தலா 7 செ.மீ.,; திருநெல்வேலி காக்காச்சி, நீலகிரி மாவட்டம் மேல் பவானி, கோவை மாவட்டம் வால்பாறை, தென்காசி மாவட்டம் அடவிநயினார் அணை பகுதியில் தலா 6 செ.மீ., மழை பெய்துள்ளது. இதேபோல், கன்னியாகுமரி, தேனி, திருப்பூர் மாவட்டங்களில், சில இடங்களில் மழை பெய்துள்ளது.
குஜராத் - வடக்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால், அரபிக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் ஆக., 1ம் தேதி வரை, சில இடங்களில் மழை பெய்யும்.
ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று, மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். அதுபோல், அடுத்த இரண்டு நாட்களுக்கு, கோவை, நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?