- 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை யொட்டி, பாஜக முக்கிய நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணிகளைத் தொடங் கியுள்ளது. ஒன்றிய அமைச்ச ரும், கட்சியின் மூத்த தலை வருமான பியூஷ் கோயல் தமிழகத்தின் 2026 சட்ட மன்றத் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பியூஷ் கோயலுடன் இணைந்து செயல்பட, மேலும் இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் இணைப் பொறுப்பாளர்களாக நிய மிக்கப்பட்டுள்ளனர். அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் ஆகி யோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறி விப்பை, பா.ஜ.கவின் தேசிய பொதுச் செயலாளரும், தலைமை அலுவலகப் பொறுப்பாளருமான அருண் சிங் வெளியிட்டு உள்ளார். பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வழி காட்டுதலின்படி, 2026 சட்ட மன்றத் தேர்தலுக்காக இந்த மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?