தாய்லாந்து - கம்போடியா எல்லைப் பிரச்சனை : இரண்டாவது நாளாக ராணுவ மோதல்

தாய்லாந்து - கம்போடியா எல்லைப் பிரச்சனை : இரண்டாவது நாளாக ராணுவ மோதல்

பாங்காக்,நாம்பென், ஜூலை 24-

தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்கு இடை யேயான எல்லைப் பிரச்சனையால் ஏற்பட்ட ராணுவ மோதல் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்துள் ளது. இந்த மோதலில் பொது மக்கள் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். எல்லைப் பிரச்சனை தொடர்பாக கடந்த சில வாரங்களாகவே இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் மிகவும் மோசமடைந்து வந்த நிலை யில் ஜூலை 23 வியாழனன்று காலை இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்தவுடன் கம்போடிய பிரத மர் ராணுவ ரீதியாக பதிலளிப்பதைத் தவிர வேறு வழியில்லை என தாய்லாந்துக்கு எச்சரிக்கை விடுத்த சில மணி நேரத்தில் தாய்லாந்து மீதான தாக்குதலை கம்போடியா ராணுவம் துவங்கியது. பதிலுக்கு தாய்லாந்து ராணுவம் எப்-16 ரக போர் விமானம் மூலமாக கம்போடியா ராணுவத் தளங்கள், ஆயுதக்கிடங்குகள் மீது வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. கடந்த மே மாதமே இரு நாட்டு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு கம்போடியா ராணுவ வீரர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் எல்லைப் பகுதியை மூடியதுடன் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தன. மேலும் ஜூலை 16, 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் தாய்லாந்து ராணுவ வீரர்கள் எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கண்ணி வெடித் தாக்குதலில் சிக்கி படுகாயம டைந்தனர். இந்த தாக்குதலுக்கு தாய்லாந்து ராணுவம் ரோந்து போகும் எல்லைப் பகுதியில் கம்போடியா கண்ணி வெடிகளை வைத்துள்ளது என தாய்லாந்து குற்றம் சாட்டியது. மேலும் கம் போடியாவின் தூதரை நாட்டை விட்டு வெளி யேற்றியது. ஆனால் கம்போடியா இந்த குற்றச்சாட்டை ஏற்கவில்லை. கடந்த கால சண்டையில் கம்போ டியா எல்லையில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிக ளைத் தான் தாய்லாந்து வீரர்கள் மிதித்துள்ளனர். அந்நாட்டு வீரர்கள் தான் காட்டுப் பாதைகளிலி ருந்து விலகி அந்தப்பகுதியில் சென்றுள்ளனர் எனவும் கம்போடியா தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஜூலை 24 அன்று இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே ராணுவ மோதல் வெடித்து இரண்டு நாட்களாக தொடர்கி றது. இருதரப்பிலும் எல்லையோர மக்கள் வெளி யேற்றப்பட்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையேயான சரியாக வரையறுக்கப்படாத எல்லைப்பிரச்சனை தான் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருதரப்பு உறவுகளைப் பாதித்து வருவதுடன் மோதலுக்கு காரணமாக உள்ளதாக கூறப்படுகிறது.தாய்லாந்துவெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் நிகோர்ண்டேஜ் பாலங்குரா இந்த மோதலுக்கு இருதரப்பு தீர்வை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%