திடீரென மின்சார தொடர் வண்டியில் எலக்ட்ரிக் வயர் அறுந்து விழுந்தால் என்னவாகும்?
பாதுகாப்பு என்பது எல்லாவித விஞ்ஞான கண்டுபிடிப்பில் முதலிடம்.
நம் வீட்டின் மின்சார அழுத்தம் 230வோல்ட். எலக்ட்ரிக் ரயில் போக்குவரத்தில் 25,000 வோல்ட்.
நேரடியாக வேண்டுமென்றே ஒரு மனிதன், மிருகம் தரையில், தண்டவாளத்தில் நின்று கொண்டு தொட்டால் எரிந்து கட்டையாகி விடுவார்கள்...
உயரமான வாகனங்கள், கம்பியை தொட்டாலும் தீப்பற்றிவிடும். (அலங்கார சாமி ஊர்வலங்கள் , தேர், லாரி இந்த மாதிரி நிறைய விபத்துக்கள் ஆகி இருக்கின்றன.)
ஆனால் பயணிகளுடன் செல்லும் ரயில் ஒரு வேளை கம்பி அறுந்து கீழே தொங்கி ரயிலை தொட்டு விட்டால் , ஒன்றும் ஆகாது.
சப்ளை செய்கிற சப் ஸ்டேசனின் பிரேக்கர் சில மில்லி செகண்டில் டிரிப் ஆகி விடும். கரண்ட் கட்டாகி விடும். பைலட் அல்லது ரயில்வே ஊழியர் (போல்) கம்பம் நம்பரை தெரிவிப்பார்.
இப்போது ரயில்வே எலக்ட்ரிக் கம்பிகளை பாருங்கள்.
சாதாரண தெருக்களில் கம்பிகளை கட்டுவது மாதிரி இருக்காது.
இடையே இடையே தாங்கி பிடிக்க கரண்ட் சப்ளை செய்ய லூப் வயர்கள் இருக்கும்.
மேலே ஒரு கம்பியில் தான் சப்ளை இருக்கும். சிறிய வயர்களின் மூலமாக கீழே ரயிலின் பேன்டோகிராப் உரசிக்கோண்டு போகும்.
கீழே உள்ள கம்பி வயரை இழுத்து ஒரே உயரம் இருக்குமாறு டென்சன் பண்ணியிருப்பார்கள். மேல் உள்ள கம்பி லூசாகவே இருக்கும். கம்பி அறுந்து விழுந்தாலும் தரையை தொடாது.
ரயில் ஓடும்போது கம்பி கட்டாகி ரயிலை தொட்டு , சப்ளை டிரிப்பாகி கட்டாகி விட்டது. 1000மக்கள் உள்ளே இருக்கிறார்கள். ஷாக் அடிக்குமே ?
ஷாக் அடிக்காது. யாருக்குமே அந்த உணர்வுகள் கூட தெரியாது. எப்படி?
Faraday Cage:
ஃபேரடே கேஜ் எபெக்ட் என்று ஸ்கூலில் 10,11,12 வகுப்புகளில் Physics ல் படித்திருப்பீர்கள். கரண்ட் முழுவதும் ரயில் பெட்டி(கேஜ்) வழியாக சென்றுவிடும் மனிதர்கள் ஒரே வோல்டேஜில் (potential, and potential difference) 00லெவலில் இருப்பார்கள்.
அதனால் ஷாக் அடிக்காது. கரண்ட் பாசால் தான் ஷாக் அடிக்கும். (உதாரணத்துக்கு கரண்ட் கம்பியின் மேல் குருவி உட்காருவது போல்).
ஃபேரடே கேஜ் எபக்ட் என்பது சரியான விளக்கம்.
இதே போல்தான் ஏரோப்பிளேன்களும் மின்னல்களிலிருந்து பாதுகாக்கப் படுகின்றன.
ஃகிளவுட் டிஸ்சார்ஜ் என்பது மின்னல்.
இது பல லட்சம் வோல்ட்டை, (மின்அழுத்தம்) கொண்டது.
இது மேகங்களுக்கு இடையே , வானத்தில் மின்னல் உருவாகும்.
மேகத்துக்கும் தரைக்கும் இடையேயும் மின்னல் உருவாகும்.
ஏரோப்ளேன் மின்னல் வழியாக பறக்கும் போது கரண்டை பைபாஸ் செய்துவிடும்.
உள்ளே இருக்கும் பயணிகளுக்கு ஒன்றும் தெரியாது. இது அபூர்வ நிகழ்வு. ...

*🌹✍️முத்து ஆனந்த்
வேலூர் - 632 002*