ஆர்ப்பரிக்கும் மனதை
ஆழ்கடல் அமைதியாக்க
உணர்ந்தும், புரிந்தும்
தெரிந்தும், தெரியாத வினாக்களுக்கு விடை
தேடும் முயற்சியே தியானம்
கண்மூடி அமர்ந்து
அமைதியாக...
தியானம் செய்,
மனதை வசப்படுத்து,
ஆன்மாவோடு பேசு,
உள்ளக் கழிவுகளைக் களை,
கவலைக் கொள்ளாதே,
ஆற்றலோடு உறுதி கொள்...
சொல்லுதல் யார்க்கும் எளிது.
ஆனால்...
தியானிக்க அமரும் நொடியில்...
மனம் கடிவாளமற்ற
குதிரையாக அலைந்து ...
ஏமாற்றங்கள், ஏற்றங்கள்
நடந்த் நிகழ்வுகள்,
இனிமை, இன்பம்
துன்பம், துரோகம் என
நினைவுகளின் குவியலாகப்
பொங்கும் அலையில்...
பழகிய, பழக்கமற்ற முகங்கள்
படித்த கவிதை வரிகள்
பார்த்து, ரசித்த இடங்கள்
வானம், நிலவு, கடல்,
அருவி, மலை, மழையென
எண்ணத்தில் பட்டம் கட்டி
காற்றாடியான மனதை இழுத்து பிடிப்பதே தியானம்.
மனம் பறந்தாலும்
மெதுவாய் அழைத்து
அமைதிக்கு திரும்பினால்
தியானம் அனைவருக்கும் சாத்தியமே.
நா.பத்மாவதி
கொரட்டூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?