திருப்பதிக்கு 121 கிலோ தங்கம் நன்கொடை கொடுத்த பிரபல தொழிலதிபர்!
Aug 21 2025
12

ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, திருமலை ஏழுமலையானின் பக்தர் ஒருவர், தனது தொழில் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 121 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்தத் தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.140 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
நன்கொடையின் பின்னணி
மங்களகிரியில் நடைபெற்ற 'வறுமை ஒழிப்பு' தொடர்பான P4 திட்டத்தின் கூட்டத்தில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பக்தர் குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
"ஒரு பக்தர் புதிய நிறுவனம் தொடங்க விரும்பினார். அதைத் தொடங்கி, அதில் பெரும் வெற்றியும் கண்டார். அந்த வெற்றிக்கான நன்றியை இறைவனுக்குத் தெரிவிக்க அவர் முடிவு செய்தார். இதன் விளைவாக, தற்போது அவர் ஏழுமலையான் சுவாமிக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்க உள்ளார்," என்று முதல்வர் கூறினார்.
ஏழுமலையான் கொடுத்த லாபம்
ஏழுமலையான் கொடுத்த லாபம்
"அந்த பக்தர், தனது நிறுவனத்தின் 60% பங்குகளை விற்பனை செய்ததன் மூலம், 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.6,000 கோடி முதல் ரூ.7,000 கோடி வரை) ஈட்டியுள்ளார். இந்த லாபத்தை அளித்தவர் ஏழுமலையான் தான் என்று கருதி, அதில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்க அவர் தீர்மானித்துள்ளார்" என்றும் நாயுடு தெரிவித்தார்.
திருப்பதியின் தினசரி அலங்காரம்
திருப்பதியின் தினசரி அலங்காரம்
தற்போது, ஏழுமலையான் சுவாமியின் மூலவர் சிலை தினமும் சுமார் 120 கிலோ தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகிறது. இதை அறிந்த அந்த பக்தர், 121 கிலோ தங்கம் வழங்க முன்வந்துள்ளதாக முதல்வர் கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?