தீபாவளி இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. புத்தாடை அணிவதும், பலகாரம் சுடுவதும், பட்டாசுகள் விடுவதும் என குதூகலத்தைத் தரும் ஒரு பண்டிகை.
வட இந்தியாவில் ஐந்து நாட்கள் இப்பண்டிகை கொண்டாடப்படும். முதல் நாள் தன திரயோதசி என்று கொண்டாடப்படும். மக்கள் தங்கள் வீடுகளை அழகான ரங்கோலிகளாலும் விளக்குகளாலும் அலங்கரிப்பர். உத்திர பிரதேசத்தில் ராமர் வனவாசம் சென்று திரும்பிய நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது அயோத்தியில் ராமர் கோவில் தீபங்களால் அலங்கரிக்கப்படும் சரயு நதிக்கரையும் விளக்கோளியில் ஜொலிக்கும் இல்லம் தோறும் தீபம் ஏற்றி ராமர் வனவாசம் சென்று திரும்பிய நாளை சிறப்பாக கொண்டாடுவர்.
தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை வாங்கி மகிழ்வர் இவற்றை வாங்குவதால் அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் என்பது அவர்கள் நம்பிக்கை. இனிப்புகள் மற்றும் பழங்களை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வர்.
தீபாவளிக்கு மறுநாள் குபேர பூஜை மற்றும் லட்சுமி பூஜை செய்வார்கள்.
குஜராத்தில் புத்தாண்டு இந்த சமயத்தில் கொண்டாடப்படும் அதற்கு பெயர் பெஸ்ட்வராஸ்.
வியாபார நிறுவனங்களில் அன்று புதுக் கணக்கு ஆரம்பிப்பார்கள்.
வங்காளம், ஒடிசா மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இது காளி பூஜையாக கொண்டாடப்படுகிறது. காளியை துர்கையின் ஒர் வடிவமாக ஐப்பசி அமாவாசை அன்று வழிபட்டு தீபாவளி கொண்டாடுவார்கள்.
தீபாவளி முடிந்து இரண்டு நாட்கள் கழித்து பாய்தூஜ் இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள். எமன் தனது தங்கையான யமுனையைக் காண வருவது பாய்தூஜ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
சகோதர சகோதரிகளின் பாசப்பிணைப்பை எடுத்துக்காட்டுவதாக இப்பண்டிகை அமைந்துள்ளது. வங்காளத்தில் பாய் போட்டா என்றும் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் எமத் துவிதியை என்றும், உத்திரபிரதேசம் மற்றும் பீகாரில் பக்ராதிரி துவதீயை என்றும் கொண்டாடப்படுகிறது. தமிழகம்
மற்றும் ஆந்திராவில், கிருஷ்ணர் நரகாசுரனை சத்யபாமாவின் உதவியோடு அழித்த நாளாகக்
வானவேடிக்கைகளின் சத்தத்தோடும் இனிப்புகளை ஒருவருக்கொருவர் கொடுத்தும் கொண்டாடுவர்.
தீபாவளி அன்று காலையில் அனைவரும் எண்ணெய் தேய்த்து
குளித்து புத்தாடை அணிந்து கோயில்களுக்கு சென்று வருவர். ஒருவருக்கொருவர் கங்காஸ்நானம் ஆகிவிட்டதா என்று கேட்பார்கள். தீபாவளி அன்று அனைத்து நீர்நிலைகளிலும் கங்காதேவி எழுந்தருள்வதாக ஐதீகம் இந்த நாளில் கங்கையில் நீராடினால் பாவங்கள் துன்பங்கள் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.
சிவபெருமானின் அஷ்ட விரத நாளான தீபாவளி அன்று தேய்த்து குளிக்கும் எண்ணெயில் மகாலட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், சுடுநீரில் கங்காதேவியும் சந்தனத்தில் பூமாதேவியும் குங்குமத்தில் கௌரி தேவியும் வாசம் செய்கிறார்கள். மலர்களில் முனிவர்களும் யோகிகளும் புத்தாடையில் மகாவிஷ்ணுவும் வாசம் செய்கின்றனர்.
அன்று செய்யும் இனிப்பில் அமிர்தமும் அன்று செய்யும் மருந்தில் தன்வந்திரி பகவானும் வாசம் செய்கிறார்கள். தீபத்தில் பரமாத்மாவும், நாம் வெடிக்கும் பட்டாசுகளில் ஜீவாத்மாவாகிய நாமும் வாசம் செய்கிறோம்.
மேலும் இப்பண்டிகை இலங்கை, சிங்கப்பூர், நேபாளம், மியான்மர், மலேசியா, உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
இந்துக்கள் சீக்கியர்கள் சமணர்கள் சமய ரீதியாகவும் ஏனைய இந்தியர்கள் கலாச்சார ரீதியாகவும் கொண்டாடுகின்றனர். பாரத நாட்டின் மிகப் பெரும் திருவிழா.
வாழ்க்கையின் இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் இருக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அலமேலு ரங்கராஜன்
எழுத்தாளர்