தீபாவளி மது விற்பனை அதிகரித்ததுஏன்? அமைச்சர் விளக்கம்

தீபாவளி மது விற்பனை அதிகரித்ததுஏன்? அமைச்சர் விளக்கம்



ஈரோடு, அக். 24-

தீபாவளி மதுவிற்ப்னை அதிகரித்தது ஏன் என்பதற்கு அமைச்சர் முத்துசாமி விள்க்கம்அளித்தார். 


ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி நேற்று பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு-

• தீபாவளிக்கு ரூ.790 கோடிக்கு மது விற்பனை குறித்து இது திராவிட மாடலா? அல்லது டாஸ்மார்க் மாடலா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி இருக்கிறாரே?

தீபாவளி போன்ற காலங்களில் வழக்கமாகவே மது விற்பனை அதிகமாக தான் இருக்கும். அதே போல் தான் இந்த ஆண்டும் மது விற்பனை அதிகளவில் நடந்துள்ளது. இதற்காக அரசு எந்த கூடுதல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. நயினார் நாகேந்திரன் கேட்க கூடிய கேள்வியே தவறானது. அரசு மது விற்பனையை ஒரு போதும் அதிகரிக்க வேண்டும் என நினைக்கவில்லை.

மாறாக அரசு படிப்படியாக மதுக் கடைகளை மூடும் முயற்சியில் இறங்கி வருகிறது. மது போதைக்கு அடிமையாகி இருப்பவர்களை மீட்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தீபாவளி பண்டிகை காலங்களை தவிர மற்ற நாட்களில் இது போன்று மது விற்பனை இருப்பதில்லை. அது அனைவரும் சந்தோஷப்பட வேண்டிய விஷயம். தொடர் விடுமுறை என்பதால் மது விற்பனை அதிகரித்து உள்ளது. 

• மது பாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறதே?

மது பாட்டில்களில் உள்ள மதுவை ஒருவர் அருந்தி முடித்து விட்டு அதனை சரியாக அப்புறப்படுத்தாமல் எங்காவது போட்டு விடுகின்றனர். இது ஆபத்தான குப்பையாக மாறுகிறது. அதனை தவிர்க்கும் வகையில் மறுசுழற்சிக்காக பாட்டில்களை மது வாங்குபவர்கள் டாஸ்மாக்கில் பாட்டில்களை ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக பாட்டிலுடன் பத்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அந்த பணம் நேரடியாக சம்பந்தப்பட்ட துறையின் வங்கிக்கு செல்கிறது. பின் அந்த பாட்டிலை ஒப்படைப்பவர்களுக்கு பத்து ரூபாய் திருப்பி கொடுக்கப்படுகிறது. சிலர் பாட்டில்களை ஒப்படைக்காமல் அவர்களுடன் வைத்து கொள்கின்றனர். அப்போது அவர்களுக்கு பத்து ரூபாய் கொடுப்பதற்கான வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%