தெலங்கானா சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
Aug 18 2025
120

ஹைதராபாத்:
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு நல்கொண்டா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.
தெலங்கானா மாநிலம், நல்கொண்டாவில் கடந்த 2013-ம் ஆண்டு, வீட்டில் தனியாக உறங்கி கொண்டிருந்த 12 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த மொஹம்மி முகர்ணம் என்கிற 35 வயது நபர், வீட்டில் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரை கொலை செய்து, வீட்டின் அருகே உள்ள ஒரு கால்வாயில் வீசி சென்றுவிட்டார். அதன் பிறகு உடல் ஒரு ஏரிக்கரையில் ஒதுங்கியது.
இதனை தொடர்ந்து, பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நல்கொண்டா போலீஸார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்து நல்கொண்டா போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இவ்வழக்கு சுமார் 12 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், நேற்று இவ்வழக்கை விசாரணை செய்த போக்சோ நீதிமன்ற நீதிபதி ரோஜா ரமணி, குற்றவாளி மொஹம்மி முகர்ணத்திற்கு தூக்கு தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?