தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் ஜனவர் 9ல் அறிவிப்பு- பிரேமலதா
Dec 14 2025
16
சென்னை, டிச.15-
தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் ஜனவரி 9ம் தேதி அறிவிக்கப்படும் என்று பிரேமலதா கூறினார்.
தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி, கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா மரியாதை செலுத்தினார். இதையடுத்து, விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்திருந்த மக்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் உணவு வழங்கினார்.பின்னர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது-
தேர்தலுக்கு தேமுதிக தயாராக உள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநில மாநாட்டுக்காக கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். கடலூர் மாநாட்டில் நல்ல அறிவிப்பு வெளியாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல பொங்கலுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் அரசியலுக்கு ஒரு நல்ல வழி பிறக்கும்.
கூட்டணி முடிவை எடுக்க தேமுதிக கொஞ்சம் கால அவகாசம் எடுத்துள்ளது. கூட்டணி குறித்தோ அல்லது யாருடன் கூட்டணி அமைப்பது? என்பது குறித்தோ உரிய நேரத்தில் நல்ல தகவல் அளிப்போம். ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டுக்குள் கூட்டணி குறித்து நல்ல முடிவு வரும். தேமுதிக நிர்வாகிகள் தொடர்ந்து களத்தில் உள்ளனர். யாருடன் கூட்டணி? எந்தெந்த தொகுதி? எத்தனை தொகுதிகள்? என்பது குறித்து ஜனவரி 9ம் தேதி தெரிவிக்கப்படும். 2026 தேர்தலில் 234 தொகுதிகளும் இலக்கு தான். அதிகாரப்பூர்வமாக தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை யாரும் தொடங்கவில்லை.
இவ்வாறு பிரேமலதா கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?