தேவீரஅள்ளி அரசுப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
Dec 05 2025
31
காவேரிபட்டணம் ஒன்றியம், தேவீரஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி சூரியகாந்தி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு பொறுப்பு ஆசிரியை கவிதா வரவேற்றார். கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் முத்து லட்சுமணன் கூட்டப்பொருளான திறன் இயக்கம், எல்லா குழந்தைகளும் பள்ளியின் உள்ளே, மணற்கேணி தூதுவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான முகாம் பற்றிய விவரம், ஆதார் புதுப்பித்தல் மற்றும் மகிழ்முற்றம் ஆகிய தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சிறப்பு திட்டங்களை பற்றி எடுத்துரைத்தார். நிறைவாக கல்வியாளர் அம்சவேணி நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?