நாகர்கோவில், அக். 23-
நாகர்கோவில் உள்ளிட்ட குமரி மாவட்டத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகரிகளுடன் மேயர் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், "நாகர்கோவிலில் கவிமணி அரசு பள்ளி, மீனாட்சிபுரம் அரசு பள்ளி, வடசேரி பகுதியில் திருமண மண்டபம் உட்பட 6 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன .பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் அவர்களை அங்கு தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை நேரங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் சுத்தமாக வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யும் 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையின் நீர்மட்டம் 21 அடியை எட்டியுள்ளது. மழை காலங்களில் தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்" என்றார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?