நாட்காட்டிப் பேசினால்

நாட்காட்டிப் பேசினால்


அடடா.. தினமும் என்னைக் கிழிக்கின்றாயே.. நீ என்ன செய்து கிழித்தாய்?

ஒவ்வொரு தாளும் உன் வாழ் நாளடா.. நாட்காட்டி நான் உன் நண்பனடா!


அம்மாவாசை முழுநிலவு 

அத்தனையும் பார்! எனக்குள்ளே.. 

நல்ல நேரம் நாட்காட்டிக்குள் நன்றாய் என்னை உற்றுப்பார்!


அரசாங்க விடுமுறைகள்

அறிவிப்புப் பலகை..

ஆன்றோர்ப் பிறந்தது

அவர் மரணித்தது.. சான்றாய் இருப்பவன்!


நாட்களைக் கழித்திட என்னைக் கிழித்தாய்.. சாமிகளை என் சாயலில் பதித்தாய்! பூமியில் என்னிலே புதிய பொழுதுகள் காலையில் என்முகம் விழித்தாய்!


ஓலை உனக்கு வரும் நாள் மட்டும்.. உடன் இருப்பவன்! தினசரி.. மாதம்.. என்றே கடப்பினும்.. ஆண்டுகள் முடியும் அதுவரை இருப்பேன் !

புது வருடத்தில் .. புது உருவத்தைப் பதிப்பேன்! அட்டையாய் போனாலும் உன் பெயரன் பெயர்த்திக்கு பரிட்சை எழுத பயன் தருவேனே!

தினசரி நாட்காட்டி உன்னை ஆசீர்வதிப்பேனே!


*வே.கல்யாண்குமார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%