நாமக்கல் கிட்னி விற்பனை புகார்: தானமாக வழங்கியவர், பெற்றவர்களிடம் சிறப்பு குழு விசாரணை

நாமக்கல் கிட்னி விற்பனை புகார்: தானமாக வழங்கியவர், பெற்றவர்களிடம் சிறப்பு குழு விசாரணை

நாமக்கல்/சென்னை:

பள்​ளி​பாளை​யத்​தில் கிட்னி விற்​பனை புகாரைத் தொடர்ந்​து, நாமக்​கல் மாவட்​டத்​தில் தான​மாக சிறுநீரகத்தை வழங்​கிய​வர்​கள் மற்​றும் பெற்​றவர்​களிடம் சிறப்​புக் குழு​வினர் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். நாமக்​கல் மாவட்​டம் பள்​ளி​பாளை​யத்​தில் ஏழை, எளிய விசைத்​தறி கூலித் தொழிலா​ளர்​களை மூளைச்​சலவை செய்து அவர்​களது கிட்​னியைத் தான​மாக வழங்​கு​வ​தாகக் கூறி சிலர் விற்​பனை செய்​வ​தாக புகார் எழுந்​தது.


மேலும், இதுதொடர்​பான ஆடியோ, வீடியோ பதிவு​கள் சமூக வலை​தளங்​களில் வைரலானது. இந்​நிலை​யில், இப்​பு​கார் தொடர்​பாக விசா​ரணை மேற்​கொள்ள தமிழ்​நாடு சுகா​தார திட்ட இயக்​குநர் டாக்​டர் வினித் மற்​றும் சுகா​தா​ரத் துறை சட்​டப்​பிரிவு துணை இயக்​குநர் மீனாட்சி சுந்​தரேசன் ஆகியோர் கொண்ட சிறப்பு மருத்​து​வக் குழுவை அரசு அமைத்​துள்​ளது.


இக்​குழு​வினர் நாமக்​கல் மாவட்​டத்​தில் கடந்த சில நாட்​களாக முகாமிட்​டு, பல்​வேறு இடங்​களில் ஆவணங்​கள் மற்​றும் விவரங்களைச் சேகரித்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இதனிடையே, நாமக்​கல் மாவட்​டத்​தில் குறிப்​பாக பள்​ளி​பாளை​யம் மற்​றும் அதன் சுற்​று​வட்​டாரப் பகு​தி​யில் கிட்​னியைத் தான​மாக வழங்​கிய​வர்​கள், பெற்​றவர்​கள் தொடர்​பான பட்​டியலை பெற்று அதில் உள்ள நபர்​களின் வீடு​களுக்​குச் சென்று விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.


தானம் வழங்​கிய​வரின் குடும்​பம், பொருளாதார நிலை குறித்​தும், தானம் வழங்க சுகா​தா​ரத் துறை​யில் சமர்ப்​பித்​துள்ள ஆவணங்​களின் விவரங்​கள் சரி​யாக உள்ளதா? எனவும் விசாரித்து வரு​கின்​றனர். மேலும், தான​மாக பெற்ற வெளிமாவட்​டங்​களைச் சேர்ந்​தவர்​களின் வீடு​களுக்​குச் சென்​றும், சிலரை சென்னை மற்​றும் திருச்​செங்​கோட்​டுக்கு வரவழைத்​தும் விசா​ரணை நடத்த திட்​ட​மிட்டுள்​ளனர்.


தானம் என்ற பெயரில் பணம் பரி​மாற்​றம் மூலம் கிட்னி பெறப்​பட்​டுள்​ள​தா? என்ற கோணத்​தி​லும் விசா​ரணை நடை​பெறுகிறது. அதே​போல், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்த மருத்​து​வ​மனை​களின் விவரங்​களை​யும் சேகரித்​துள்​ளனர். அடுத்த கட்​ட​மாக மருத்​து​வ​மனை​களி​லும் விசா​ரணை நடத்த உள்​ளனர். அதன் அடிப்​படை​யில் அடுத்​தக்​கட்ட நடவடிக்கை இருக்​கும் எனசுகா​தா​ரத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்​.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%