தினம் ஒரு ஆதவன் போல் தினம் நாம் சிரிப்போம்
அதுவே நமக்கு அருமருந்து என்று உணர்ந்து சிரிப்போம்.
புன்னகை பூக்கும் போது மனதும் சிரிக்கிறதே
மனம் சிரித்தால் அதுவே நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அரு மருந்து
இறைவன் மனிதனுக்கு கொடுத்த வரம் சிரிப்பு
உன் கண்ணில் நீர் வரும் வரை சிரித்து விடு ஆனால் மறந்தும் மற்றவர் கண்ணில் நீர் நீர் வருவதைப் பார்த்து சிரிக்காதே.
சிரிப்பை கொடுக்க பணம் வேண்டாம் மனம் இருந்தால் போதும்
உடலை காக்கும் இலவச மருந்து நம்மிடம் இருக்க எதற்கு நாம் கையேந்த வேண்டும்
நித்தம் நித்தம் சிரிப்பதில் மனம் சுத்தம் ஆவது உண்மை
உணர்வோம் புன்னகையின் மதிப்பை சிரிப்போம் தினம் தினம் ஆரோக்கியமாக வாழ்வோம்...
உஷா முத்து ராமன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?