நிலநடுக்கத்திற்கு முன்பே கரை ஒதுங்கிய பெரிய திமிங்கலங்கள்; வீடியோ வைரல்: காரணம் என்ன?
Aug 01 2025
111

டோக்கியோ,
ரஷியாவின் கம்சத்கா தீபகற்ப பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகி இருந்தது. இதனையடுத்து, ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்தில் இருந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
கம்சத்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் பதிவாகின. இதனால், பிலிப்பைன்ஸ், பலாவ், மார்ஷல் தீவுகள், சூக், கொஸ்ரே பகுதிகளில் ஒன்று முதல் 3.3 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்ப கூடும்.
தென்கொரியா, வடகொரியா மற்றும் தைவானில் ஓரடிக்கு மேல் உயரத்தில் அலைகள் எழும்பும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜப்பான் கடலோர பகுதிகளில் 3 அடி உயரத்திற்கு கடலலைகள் எழும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்தது.
இந்நிலையில், ஜப்பான் கடலோர பகுதியில் 4 பெரிய உருவிலான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. எனினும், ரிக்டரில் 8.8 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பே அவரை கரை ஒதுங்கி விட்டன என தகவல் தெரிவிக்கின்றது. இதனால், நிலநடுக்கம் மற்றும் சுனாமி அலைகள் தாக்குவதற்கு முன்பே அவற்றை திமிங்கலங்கள் அறிந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. ஆனால், அதற்காக அவை ஏன் கரையொதுங்கின? என்ற விவரமும் தெரிய வராமல் உள்ளது.
இது வரலாற்றில் பதிவான 6-வது பெரிய நிலநடுக்கம் இதுவாகும் என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால், ஜப்பானில் உள்ள துறைமுகங்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. ஜப்பானின் கடற்கரையை நோக்கி பெரிய அலைகள் திரண்டு வரும் காட்சிகளும் வீடியோவாக வெளியிடப்பட்டு உள்ளன.
இதேபோன்று, ரஷியாவின் கடலோர பகுதிகளில், சுனாமி அலைகளால் பெரிய கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், வெள்ள பெருக்கும் ஏற்பட்டது. இதனால், ரஷியாவின் கிழக்கே தொலைவில் அமைந்த வடக்கு குரில் தீவு பகுதிகளில் உள்ள சகாலின் பகுதியில், இன்று அவசரகால நிலையும் அறிவிக்கப்பட்டது.
கடலோரத்தில் இருந்த கட்டிடங்கள் அலையில் அடித்து செல்லப்பட்டன. அதுபற்றிய வீடியோவும் வெளியானது. சுனாமி அலைகள் ஹவாய் தீவையும் தாக்கும் என கூறப்படுகிறது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?