நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றுவதில் தாமதம் 8.82 லட்சம் மனுக்கள் நிலுவை : உச்சநீதிமன்றம் அதிருப்தி
Oct 24 2025
17
நீதிமன்றங்கள் பல வழக்குகளில் வெளியிடப்பட்ட உத்தரவுகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. அந்த உத்தரவுகளை நிறைவேற்ற வலி யுறுத்தி மீண்டும் நாடு முழுவதும் நீதி மன்றங்களில் சுமார் 8.82 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு அவையும் நிலுவையில் உள்ளன. இதனை குறிப்பிட்ட உச்சநீதிமன்ற அமர்வு தனது அதிருப்தியை தெரி வித்துள்ளது. உரிமையியல் வழக்குகளில் தமக்குச் சாதகமாக நீதிமன்ற உத்தரவு பெற்றவா்கள், அந்த உத்தரவை நிறை வேற்றக் கோரி தாக்கல் செய்யும் மனுக்கள் மீது, அவை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்க ளுக்குள் முடிவு எடுக்குமாறு, தமது அதிகார வரம்புக்குள்பட்ட உரிமையி யல் நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அனைத்து உயா்நீதி மன்றங்களுக்கும் கடந்த மார்ச் 6 ஆம் தேதியே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது. இந்த உத்தரவுக்கு இணங்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமா்வு அண்மை யில் ஆராய்ந்தது. அப்போது நீதிபதிகள் அமா்வு கூறி யதாவது: உரிமையியல் சச்சரவுகளில் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றக் கோரி, நாட்டில் உள்ள பல்வேறு நீதி மன்றங்களில் 8.82 லட்சத்துக்கும் மேற் பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன. இது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதுடன், அபாயகரமாகவும் உள்ளது. ஓர் உத்தரவை பிறப்பித்த பின் அதை நிறைவேற்ற பல ஆண்டுகளாகும் என் றால், அந்த உத்தரவால் எந்த அா்த்தமும் இல்லை. மேலும் இது நீதி பரிபாலனத்தை ஏளனம் செய்வதற்குச் சமமான விஷயம். எனவே நிலுவையில் உள்ள அந்த மனுக்கள் மீதான விசாரணையை திறம்ப டவும், விரைந்தும் நிறைவு செய்ய நடை முறையை உருவாக்கி, மாவட்ட நீதித்துறைக்கு அனைத்து உயா்நீதிமன் றங்களும் வழிகாட்ட வேண்டும் என்று அந்த அமர்வு கேட்டுக்கொண்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?