நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்குச் சொந்தமான இடங்கள் மீட்பு

நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்குச் சொந்தமான இடங்கள் மீட்பு



தஞ்சாவூர், அக்.24 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஏந்தல் அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் திருக்கோவிலுக்குச் சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்பிலான ஐந்து இடங்கள் ஆக்கிர மிப்பிலிருந்து மீட்கப்பட்டன. நீதிமன்ற உத்தரவின்படி, தஞ்சை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரின் அறிவுறுத்த லின் பேரில், பேராவூரணி கடைவீதியில் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்த களம் மற்றும் வீடு, நீலகண்டபுரம் பகுதியில் இரண்டு தென்னந்தோப்பு மற்றும் மண்பானை கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த கூரை வீடு உள்பட 5 இடங்கள் மீட்கப்பட்டு, முள்வேலி அமைக்கப்பட்டு திருக்கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது. மீட்பு நடவடிக்கையில் இந்து சமய அறநிலை யத்துறை தஞ்சை உதவி ஆணையர் தி.ஞா.ஹம்சன், திருக்கோவில் ஆலய நிலங்கள் வட்டாட்சியர் பார்த்த சாரதி, பேராவூரணி வட்டாட்சியர் சுப்பிரமணியன், கோவில் செயல் அலுவலர் அருண் பிரகாஷ், பரம்பரை அறங்காவலர்கள் குழுத் தலைவர் கணேசன் சங்கரன், அறங்காவலர் குப்பமுத்து சங்கரன், முடப்புளிக்காடு கிராமத்தார்கள் சார்பில் செழியன், வருவாய்த்துறை அலு வலர்கள், காவல்துறை மற்றும் திருக்கோவில் பணியா ளர்கள் உடனிருந்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News