நேர்மையாக வரி செலுத்துவோரை கண்ணியமாக நடத்த வேண்டும்: ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் நிதியமைச்சர் வலியுறுத்தல்

நேர்மையாக வரி செலுத்துவோரை கண்ணியமாக நடத்த வேண்டும்: ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் நிதியமைச்சர் வலியுறுத்தல்



புதுடெல்லி: நேர்​மை​யாக வரி செலுத்​து​வோரிடம் சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) அதி​காரி​கள் கண்​ணி​யத்​துட​னும், பரிவுட​னும் நடந்து கொள்ள வேண்​டும் என்று மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் வலி​யுறுத்தி உள்​ளார்.


உத்தர பிரதேச மாநிலம் சிஜிஎஸ்டி கட்​டிட திறப்பு விழா​வில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் பேசி​ய​தாவது: ஜிஎஸ்டி அதி​காரி​களின் தவறான நடத்​தை, கடமை தவறு​தல் அல்​லது நெறி​முறையற்ற போக்கை எந்த வகை​யிலும் சகித்​துக் கொள்ள முடி​யாது. மத்​திய மறை​முக வரி​கள் மற்​றும் சுங்க வாரி​யத்​தின் (சிபிஐசி) அதி​காரி​களுக்கு எதி​ரான ஒழுங்கு நடவடிக்​கைகள் சரி​யான நேரத்​தில் முடிக்​கப்பட வேண்​டும்.


வரி நிர்​வாகத்​தின் இலக்கு என்​பது நேர்​மை​யான வரி செலுத்​து​வோரின் வாழ்க்​கையை எளி​தாக்​கு​வது​தான். ஜிஎஸ்டி அதி​காரி​கள் வகுக்​கப்​பட்ட வரி விதிப்பு விதி​களைப் பின்​பற்றி கருணை​யுட​னும், மரி​யாதை​யுட​னும் வரி செலுத்​து​வோரிடம் நடந்து கொள்ள வேண்​டும்.


ஜிஎஸ்டி அதி​காரி​களைப் பொருத்​தவரை​யில் கண்​ணி​யத்​துடன் இருப்​பது முக்​கி​யம். அடுத்த தலை​முறை ஜிஎஸ்டி என்​பது விகிதங்​கள், அடுக்​கு​கள், எளிமைப்​படுத்​துதல் மட்​டுமல்ல. வரி செலுத்​து​வோருக்கு வித்​தி​யாச​மான உணர்வை தர வேண்​டும்.


நேர்​மை​யான வரி செலுத்​து​வோர் கவுர​வமாக நடத்​தப்பட வேண்​டும் என்று வாதிடப்​படும் அதே வேளை​யில் கருப்பு ஆடு​களை சட்​டத்​தின் முன் நிறுத்த தவறக்​கூ​டாது. அனை​வரை​யும் சந்​தேகக் கண் கொண்டு பார்க்க வேண்​டாம் என்​பதே எனது எண்​ணம்.


வரி செலுத்​து​வோர் மீதான சுமையை குறைக்க விரை​வான பதிவு ஒப்​புதல்​கள் மற்​றும் குறை​களை தீர்க்க ஜிஎஸ்டி அதி​காரி​கள் தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்த வேண்​டும். இவ்​வாறு நிதி​யமைச்​சர்​ நிர்​மலா சீதா​ராமன்​ பேசி​னார்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News