படித்த பள்ளியிலேயே தலைமையாசிரியை: ஊர் மக்கள் பாராட்டு
Jul 18 2025
151

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் படித்த பள்ளியிலேயே பழங்குடியின மாணவி, தலைமையாசிரியையாக பதவியில் அமர்ந்ததற்கு ஊர் மக்கள், முன்னாள் மாணவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே பேணு பகுதியை சேர்ந்தவர் ஷீலா. இவர் பத்துகாணி அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவியர் விடுதியில் தங்கி, பள்ளி படிப்பை முடித்தார்.
பின், ஆசிரியர் பயிற்சி முடித்து வட்டப்பாறை தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்த நிலையில் தற்போது பத்து காணி அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியையாக பொறுப்பேற்றுள்ளார்.
இவரை, சக ஆசிரியர்களும், அப்பகுதி மக்களும் பாராட்டியுள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?