பத்தினி கோட்டத்தில் கண்ணகி திருநாள் விழா

பத்தினி கோட்டத்தில் கண்ணகி திருநாள் விழா


பூம்புகார், ஆக.5-


மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மேலையூரில் உள்ள பத்தினி கோட்டத்தில் கண்ணகித் திருநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

 பூம்புகார் மேலையூர் பத்தினிக் கோட்டத்தில் கண்ணகிக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பத்தினிக் கோட்ட அறநிலையம் சார்பில் இங்கு ஆண்டுதோறும் கண்ணகி வீடுபேறு அடைந்த (ஆடி அனுஷம்) நாளில் கண்ணகித் திருநாள் விழா நடத்தப்பட்டு வருகிறது. 53-ம் ஆண்டு கண்ணகித் திருநாள் நேற்று நடந்தது.

  இதையொட்டி கண்ணகி திருவுருவச் சிலைக்கு பன்னீர், பால், இளநீர், திரவியப் பொடிகளாலும், கங்கை, காவிரி நீராலும் அபிஷேகம் செய்யப்பட்டது. அணிகலன்கள் அணிவித்து கண்ணகியை போற்றி பாடல்கள் பாடி மலர் வழிபாடு செய்தனர். பெண்கள் பொங்கலிட்டு, மாவிளக்கு வைத்து கண்ணகியை வழிபட்டனர்.

 தொடர்ந்து சிலம்புப்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலையூர் சிலப்பதிகார ஆய்வு மைய செயலரும், பத்தினிக் கோட்ட அறநிலைய அறங்காப்பாளருமான இரா.ராஜசேகரன் தலைமை வகித்தார். சீனிவாசா உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயலர் இரா.ராமசொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாக அலுவலர் நடனம் முன்னிலை வகித்தார். பூம்புகார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் யோகப்பிரியா ‘சிலம்பில் செந்தமிழ்ப்பாவை’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். தமிழாசிரியர் ஏ.ரவி தொகுத்து வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் ச.பரணிதரன் நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%