பவுன்சர்கள் தூக்கி வீசியதாக இளைஞர் புகார்: விஜய் மீதான வழக்கு விசாரணை தொடக்கம் - முழு விவரம்!

பவுன்சர்கள் தூக்கி வீசியதாக இளைஞர் புகார்: விஜய் மீதான வழக்கு விசாரணை தொடக்கம் - முழு விவரம்!

மதுரை / பெரம்பலூர்:

தவெக மாநாட்​டில் இளைஞர் தூக்கி வீசப்​பட்ட விவ​காரத்​தில் கட்​சித் தலை​வர் விஜய் மற்​றும் 10 பவுன்சர்கள் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரணை​யைத் தொடங்​கினர்.


மதுரை மாவட்​டம் பாரப்​பத்​தி​யில் தவெக 2-வது மாநில மாநாடு கடந்த 21-ல் நடந்​தது. இதில் லட்​சக்​கணக்​கான தொண்​டர்​கள், நிர்​வாகி​கள் பங்​கேற்​றனர். தொண்​டர்​கள், ரசிகர்​களை விஜய் சந்​திக்​கும் வகை​யில் மேடையி​லிருந்து 800 மீட்​டர் நீளத்​தில் ‘ரேம்ப் வாக்’ அமைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில், அரு​கில் சென்று விஜயை பார்க்க முயன்ற பெரம்​பலூர் மாவட்​டம் பெரி​யம்​மா​பாளை​யம் கிராமத்​தைச் சேர்ந்த சரத்​கு​மார் என்​பவரை பவுன்​சர்​கள் குண்​டுக்​கட்​டாக தூக்கி கீழே வீசி​ய​தாக​வும், அவர் ‘ரேம்ப் வாக்’ பக்​க​வாட்டு கம்​பியைபிடித்​துத் தொங்கி உயிர் தப்​பிய​தாக​வும் புகார்​கள் எழுந்​தன.


இந்​நிலை​யில், சரத்​கு​மார், தனது தாயார் சந்​தோசத்​துடன் சென்று பெரம்​பலூர் மாவட்ட கூடு​தல் எஸ்​.பி.​யிடம் புகார் அளித்​தார். அதில், “தலை​வரைப் பார்த்த ஆர்​வத்​தில் நடைமேடை​யில் ஏறினேன். என்​னைத் தாக்​கும் நோக்​கில் பவுன்​சர்​களில் ஒரு​வர் என்னை கீழே இறங்​கு​மாறு அசிங்​க​மான வார்த்​தை​யால் திட்​டி​னார். மற்​றொரு பவுன்​சர் இடித்​துத் தள்ளி தாக்​கியதுடன், என்னை கீழே தூக்கி வீசி​னார். அதில் எனக்கு நெஞ்​சுப் பகு​தி, உடலில் உள்​கா​யம் ஏற்​பட்​டுள்​ளது. முதலுதவி சிகிச்சை அளிக்​கக் கூட யாரும் முன்​வர​வில்​லை. இது​போன்று வேறு யாருக்​கும் நடக்​கக் கூடாது. தலை​வர் விஜய் மீதும், சம்​பந்​தப்​பட்ட பவுன்​சர்​கள் மீதும் நடவடிக்கை எடுக்​கவேண்​டும்” என்று புகாரில் குறிப்​பிட்​டிருந்​தார்.


இது தொடர்​பாக பெரம்​பலூர் மாவட்​டம் குன்​னம் போலீ​ஸார் விஜய் மற்​றும் 10 பவுன்​சர்​கள் மீது கும்​பலாகச் சேர்ந்து தாக்​கியது உட்பட 3 பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்​தனர். மாநாடு நடந்த இடம் மதுரை கூடக்​கோ​வில் காவல் நிலைய எல்லை என்​ப​தால், வழக்கு அந்த காவல் நிலை​யத்​துக்கு மாற்​றப்​பட்​டது. தவெக தலை​வர் விஜய் மற்​றும் பவுன்​சர்​கள் 10 பேர் மீது போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து,விசா​ரணை​யைத் தொடங்​கினர்.


இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “பா​திக்​கப்​பட்​ட​தாகக் கூறப்​படும் சரத்​கு​மார் விஜய் கட்​சி​யைச் சேர்ந்​தவ​ரா? பவுன்​சர்​கள் தூக்கி வீசிய நபர் அவர் தானா? என்​பது குறித்து வீடியோ உள்​ளிட்ட ஆதா​ரங்​களைக் கொண்டு முதலில் விசா​ரிக்​கப்​படும். இதற்​குப் பின்​னர் அடுத்​தகட்ட விசா​ரணை நடை​பெறும்” என்​றனர்.


வாபஸ் பெற கோரி அழுத்​தம்: இதற்​கிடையே, பாதிக்​கப்​பட்ட சரத்​கு​மார் தனது தயாருடன் மதுரை காவல் கண்​காணிப்​பாளர் அரவிந்தை சந்​தித்து புகார் கொடுத்​தார். அப்​போது, அவரிடம் எஸ்​.பி. விசா​ரணை நடத்​தி​னார். பின்​னர் சரத்​கு​மார் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தவெக தரப்​பில் என் மீது புகார் அளித்​தா​லும், நான் சந்​திக்​கத் தயா​ராக உள்​ளேன். எனக்கு எந்த கட்​சி​யின் பின்​புல​மும் கிடை​யாது. இனிமேல் பிறருக்கு இது​போன்று நடக்​கக் கூடாது என்​ப​தற்​காகத்​தான் புகார் அளித்​தேன். புகாரைத் திரும்​பப் பெறக்​கோரி, அடையாளம் தெரி​யாத நபர்​களிட​மிருந்து மிரட்டல் அழைப்​பு​கள் வரு​கின்​றன. மாநாட்​டில் பங்​கேற்ற நான், அரியலூரில் இருந்து ரயி​லில் மதுரைக்கு வந்​தேன். என்​னைப் போன்ற ஒரு​வர், தான்​தான் அந்த இளைஞர் என பொய்​யான வீடியோ வெளி​யிட்​டுள்​ளார்” என்​றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%