பஹல்காம் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகள்: கல்விச்செலவை ஏற்கிறார் ராகுல்!
Jul 31 2025
117

புதுடில்லி:
பாகிஸ்தானின் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்விச்செலவை காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் ஏற்பதாக அறிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். பின்னர், பாகிஸ்தானுக்கு ஆப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தக்கம் பாடம் புகட்டியது. பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்கள் துல்லியமாக அழிக்கப்பட்டன.
அப்போது காஷ்மீரில் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல் முடிவு செய்துள்ளார். இதனை ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா உறுதி செய்தார்.
இது குறித்து, நிருபர்களிடம் தாரிக் ஹமீத் கர்ரா கூறியதாவது: இந்திய- பாகிஸ்தான் சண்டையில், பூஞ்ச் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ராகுல் ஏற்றுள்ளார். இந்த உதவித் தொகைக்கான முதல் தவணை நாளை வழங்கப்படும். குழந்தைகள் பட்டம் பெறும் வரை இந்த உதவித் தொகை தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?