பாகிஸ்தானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 48 மணி நேரத்தில் 307 பேர் உயிரிழப்பு
Aug 17 2025
101

மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கில் மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர்.
வடமேற்கு பாகிஸ்தான் மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 307 பேர் உயிரிழந்துள்ளனர்.
வருகிற 21ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் 307 பேர் உயிரிழந்துள்ளனர். மேகவெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
279 ஆண்கள், 15 பெண்கள், 13 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். புனர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 184 பேர் உயிரிழந்துள்ளனர். மன்சேரா மாவட்டத்தில் 23 பேரும், ஷங்லா மாவட்டத்தில் 36 பேரும், பஜாயுர் மாவட்டத்தில் 21 பேரும், பட்டாக்ராம் மாவட்டத்தில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். 74 வீடுகள்முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?