பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் 48 மணி நேர போர் நிறுத்தம்

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் 48 மணி நேர போர் நிறுத்தம்



 பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே 48 மணி நேரம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லையில் கடந்த 2 வாரங்களாக கடும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட ராணுவத்தாக்குதல்கள் நடந்து வந்தன. இந்த மோதலில் பாகிஸ்தானுக்கு பின்னால் அமெரிக்காவின் கை இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தா னின் கோரிக்கையை ஏற்று 48 மணி நேரம் போர்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.


சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பின்தங்கிய இந்தியா  


சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் தரவரிசைப் பட்டியலில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. கடந்த 2014 முதல் முதலிடத்தில் இருந்து வந்த அமெரிக்கா 12 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. இந்தத் தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்திலும், இந்தியா 85-ஆவது இடத்திலும் உள்ளன. அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகள் மாணவர் விசா கட்டுப்பாடுகள் காரணமாக அது தரவரிசையில் பின்னோக்கிச் சென்றுள்ளது என கூறப்படுகிறது.  


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%