
சிந்த்,
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மேற்கூரை இடிந்து விழுந்தும், மின்சாரம் தாக்கியும், நீரில் மூழ்கியும் பலர் பலியாகி உள்ளனர்.
இவர்களில், யார் முகமது காலனி பகுதியில் ரஜியா முகேரி (வயது 40) என்ற பெண்ணும், இஸ்லாம் சச்சார் கிராமத்தில் கவீதா சச்சார் (வயது 22) என்ற பெண்ணும் மழை பெய்து கொண்டிருந்தபோது, மோட்டாருக்கு சுவிட்ச் போடும்போது, மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தனர்.
இதேபோன்று, வீட்டுக்கு வெளியே இருந்த மின்கம்பத்தில் கை வைத்ததில், மின்சாரம் பாய்ந்து இம்தாத் அலி சர்கி என்ற 13 வயது சிறுவன் பலியாகி விட்டான். ரஷீத் அலி மற்றும் அபு பக்கர் ஆகிய சகோதரர்கள் 2 பேரும் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மிஸ்பா என்ற 7 வயது சிறுவன் விளையாடும்போது, குளத்தில் மூழ்கி பலியானான்.
கனமழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதில், மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டு நீண்ட நேரம் சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தொலைதொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டது. வெள்ள பாதிப்புகள், கிராமம் மற்றும் நகர பகுதிகளில் காணப்பட்டன.
இதனால், ரெயில்வே நிலையங்கள், பஸ் நிலையங்கள், வீடுகளுக்கு செல்வதற்கான சாலைகள் முடங்கின. வேலைக்கு செல்ல முடியாமல் மக்கள் தவித்தனர். தெருக்களில் சாக்கடை தேங்கி மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஐதராபாத் மாகாணத்திலும் கடந்த ஞாயிற்று கிழமை முதல் 2-வது முறையாக பருவமழை பொழிய தொடங்கியுள்ளது. பாகிஸ்தானில் நடப்பு பருவமழை காலத்தில், கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?