
ஈரோடு, ஆக. 16-
பல மதத்தவர்கள் ஒன்றிணைந்து ஒற்றுமை உணர்வோடு சேர்ந்து வாழ்வதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசு செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டினார்.
நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. பவானிசாகர் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அ. பண்ணாரியின் அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அங்கு வந்திருந்த கட்சித் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி-
இந்திய நாடானது, மதம் மொழிக்கு அப்பாற்பட்டு அனைவரையும் ஒன்று சேர்த்து மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது. குறிப்பாக, இந்தியா உலகளவில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் இங்கு பல மதத்தவர்கள் ஒன்றிணைந்து ஒற்றுமை உணர்வோடு வாழ்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல் அரசும் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு தேசம் வலிமையோடு இருப்பதற்கும், இங்குள்ள மக்களின் சுதந்திரத்தை பேணி காக்கும் வகையிலும் தொழில், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றை மக்களுக்கு சிறந்த முறையில் அளிக்கும் வகையிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர்,மத்திய பாஜக அரசை பாராட்டி பேட்டி அளித்தார்
அதிமுகபொதுச் செயலாளர் பழனிசாமியுடன் ஏற்கனவே கருத்து வேறுபாடு காரணமாக அவரது நிகழ்ச்சிகளை செங்கோட்டையன் புறக்கணித்து வருகிறார். இந்த நிலையில் அவர், மத்திய பாஜக அரசை பாராட்டி பேட்டி அளித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது-
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?